பக்கம்:நாகப்பட்டினம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 நாகபட்டினம்

இவ்வணிகத்தில் திரு பொன். பழனிவேல் அவர்களும் சட்டப் பேரவை உறுப்பினர் திரு கோடிமாரி அவர்களும் குறிப்பிடத்தக்க சிலரும் ஈடுபட்டுள்ளனர். .

இறாலுடன் சுவையான வெளவால் (கருப்பு வெள்ளை, வகைகள்) வஞ்சிரம், கனவா, வினம் முதலிய மீன்களுடன் கடல் பாசியும் வெளிவணிகத்திற்கும் உள்ளூர் வணிகத்திற்கும் பயன் படுகின்றன. இவை நாகையில் பிடிக்கப்பட்டு, பனிக்கட்டியால் பதத்துடன் அன்றாடம் விற்பனைக்கு நகரைவிட்டு வெளியேறுகின்றன.

நகர்க்குள் நிலவும் வாணிபத்தில் ஒரு நகருக்கு இயல்பானவை இங்கும் அமைந்துள்ளன. பெயர் பெற்ற துணி வாணிபம் திரு அரங்கராமானுச நாயுடு அவர்கள் (மு.இரா. சன்சு), திரு மோகன் அவர்கள் முதலியோரால் நிகழ்கின்றது.

மர வணிகத்தில் மன்னராகத்திறன்மிக்க திரு.இரா. நாராயணன் அவர்கள் (இராமகிருட்டினர் டிம்பர் டெப்போ) விளங்கி வருகிறார்.

பொதுச் சரக்குகள் வாணிபத்தில் முக்கால் நூற்றாண்டு வரலாற்றுடன் திரு நா. வி. காயாரோகணம் செட்டியார் மற்றும் திரு இரா. கலியாண சுந்தரம் ஆகியோருடன், புதிதாகக் கவர்ச்சியான அமைப்புடன் சில அன்பர்களும் விளங்குகின்றனர்.

திரு பன்னிர்செல்வம், திரு கு. இலக்குவன் ஆகியோர் முல்லங்கி செட்டியார் வழியினர், திரு ஆவடைத்தங்கம் முதலியோர் மளிகை வாணிபர்கள். கன்னியப்ப செட்டியார் இரும்பு, வண்ண வாணிபம் பழமையானது. பொன், வெள்ளி அணிகலன் வாணிபம் திரு.பா.க. பாலகுரு செட்டியார் ந. ஆறுமுகப் பத்தர் மக்கள், திரு கோபால கிருட்டிணன், விறுவிறுப்பான திரு இரா. வீரப்பன் முதலியோரால் சிறப்படைகிறது. +

வைரம். மணிகள், நோட்டம் பார்ப்பதில் தேர்ந்த திரு கோதண்டபாணிப்பத்தர் அணிகல அமைப்பிலும் தேர்ந்தவராக விளங்குகிறார். அமைதியும், தெளிவும் உடையவர். .

சிறு பொறிகளின் துணைப் பொருள் வாணிபத்தில் திரு. என். ஆர்.முருகையன் அவர்கள் தனித்தவோர் அமைப்பாக அமைதியுடன் செயற்படும் வாணிபர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/394&oldid=585283" இலிருந்து மீள்விக்கப்பட்டது