பக்கம்:நாகப்பட்டினம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

ஐ. நிறைவுரை இந்த நிறைவுரை நூலுக்கும் நிறைவுரை: நாகைக்கும் நிறைவுரை. ஆனால் நிலைத்து நின்றுவிடும் நிறைவுரையன்று: நிகழ்கால நிறைவுரையாகும். நூலுக்கும் நிகழ்கால நிறைவுரை: நாகைக்கும் நிகழ்கால நிறைவுரை அதனால் நிறைவுரை தொடரும்: நூல் நிறைவுரையும் இந்நூலைத் தொடர்ந்து நாகபட்டின வரலாற்று நூல்களும் எழுதப்பெற்றுத் தொடர்ந்து நிறைவுரைகளைப் பெறும். - நாகபட்டினம் பலநிறைகளை மேலும் மேலும் பெற்றும்

பல்லோராலும் நிறைவுரைகளைப் பெறும்.

ஒரு நாடு முழு நிறைவுபெற அது 5 அணிகளைக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவர் விதிப்பு.

"பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து" (8) என்பது அவர் நிறைவுரை. இந்நூலில் இவ்வைந்தும் நாகைத் தொடர்புடன் காட்டப் பெற்றுள்ளன.

இவ்வணிகளை இந்நேரம் முதல் ஊழி ஊழிக் காலமும் நாகை சூடி வர வேண்டும். ஐந்தில் முன் நான்கைவிட இப்போது உடனடிக் கவனத்திற்குரியது ஏமம் என்னும் பாதுகாப்பு. ஆண்டுதோறும் நவம்பர் 30 நாகைக்கு அச்சுறுத்தும் நாள். சூறாவளி, புயல், கடல் அலை புகல் என்பன ஆண்டுதோறும் தொடர்கதை. அரசு இதற்குச் சில ஏற்பாடுளைச் செய்துள்ளது. நிறைவான ஏற்பாடுகள் முன்னர் காட்டப் பெற்றுள்ளன. மற்றைய நான்கும் அவ்வப்போது காட்டப்பெறவும் வேண்டும். காட்டுபவர் எவர்? .

ஆம். காட்டுபவர் ஒரு குழுவினராக உருவாக வேண்டும். நாகையில் வணிக அமைப்புகள், சுழற்சங்கம், அரிமா சங்கம், தொழிலாளர் சங்கம், இலக்கியச் சங்கம், ஆன்மீக மன்றம், இனத்தவர் பேரவை என்றெல்லாம் உள்ளன.

இன்னோர் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு நகர மக்கள் பேரவையை அமைக்க வேண்டும். நாகை நலங்கருதி திங்களுக்கொருமுறையும், உடனடி நடவடிக்கைக்கேற்ப வேண்டும் காலத்தும் கூடி நிலைமைகளை ஆய்ந்து கலந்துரையாடி அரசுக்கு அறிவிப்பதையும். வலியுறுத்துவதையும் கடமையாகக் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/400&oldid=585291" இலிருந்து மீள்விக்கப்பட்டது