பக்கம்:நாகப்பட்டினம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாகபட்டினம்

இப்பட்டியல் பத்திகளின் இரு வண்ணனைகளும் ஒன்றித்து நிற்பதைக் காட்டுகின்றன. மேலும் பட்டின மகளிர் பற்றிய வண்ணனை, பரதவர் பற்றிய செயல்முறைகள், உயர்ந்த மாடங்கள் முதலியனவும் ஒருமித்த காட்சியளிக்கின்றன.

இரண்டிலும் - கடல்துறையில் கலங்கள் - நாவாய்கள் நிற்கின்றன: குதிரைகள் இறங்குகின்றன:

பண்டங்கள் இறங்குகின்றன: உள்ளூர்ப் பண்டங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும், - இரண்டு வண்ணனையிலும் பண்டங்களைக் காவலர் காத்து நிற்கின்றனர்: கள்ளுக்கடை முற்றத்தில் மலர்கள் துவப்பட்டிருக்கின்றன: பலர்புகும் பெரிய வாயில்கள் இருக்கின்றன; மாடிவீடுகளில் ஏற்றப்பட்ட விளக்குகள் நாவாய்களில் செல்வோர்க்கு ஒர் அடையாளமாக இருக்கின்றன. -

இவற்றை ஒர்ந்து பார்த்தால், உருத்திரங்கண்ணனார் என்னும் ஒரே ஆசிரியரால் வண்ணிக்கப்பெறும் பெரும்பாணாற்றுப்படைப் பட்டினமும், பட்டினப்பாலைப் பட்டினமும் ஒன்றே என்பது புலப்படும்.

மற்றோர் அமைவையும் காணவேண்டும். பெரும்பாணாற்றுப் படையிலும், பட்டினப்பாலையிலும், பட்டினம் என்று பொது வாகவே குறிக்கப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் என்று பட்டினப் பாலையிலும் இல்லை. ஆனால் (காவிரி) புகுந்து நிறை (புகு + ஆர்) வடையும் இடம் என்றும் புகார்ப் பெயர் வருகின்றது. எந்த ஆறு கடலில் புகுந்து நிறைந்தாலும் புகார் என்று குறிக்கலாம். ஆனால், புகார் என்னும் பெயர் காவிரி புகுந்து நிறைவடையும் காவிரிப் பூம்பட்டினத்தையே குறிப்பது.

இதனாலும், மேலும் பட்டினப்பாலைத் தலைவன் கரிகாலன் ஆண்ட பட்டினமாகையால் அது காவிரிப்பூம்பட்டினம் என்பது சொல்லாது போனாலும் உண்மை. அஃதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/42&oldid=584924" இலிருந்து மீள்விக்கப்பட்டது