பக்கம்:நாகப்பட்டினம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. நாகபட்டினம்

வேண்டும். மதுராந்தகம் வட்டத்து நீர்ப்பேருக்கு வடக்கே கடல்துறைப் போக்குவரத்து கொண்ட பட்டினம் இல்லை. சென்னப்பட்டினம் பிற்காலத்தே உருவானது. அவ்வாறானால் "நீர்ப்பெயற்றெல்லை" என்றது, எதனைக் குறிக்கும் என்ற வினா எழுதல் இயல்பே.

'நீர்ப்பேர் என்பது "நீர்ப்பெயற்றெல்லை" அன்று. நீர்ப் பெயற்று' என்னும் சொல் நீர்ப்பேர் என்று மருவுவதற்கு வாய்ப் புண்டு என்றாலும் இடச்சூழலை நோக்க அதனை அடுத்தமைந்த தாகக் குறிக்கப்பெறும் பட்டின இடமும் பொருந்தா. எனவே, 'நீர்ப்பேர் வேறு: "நீர்ப்பெயற்றெல்லை" வேறு, நீர் என்னும் அடை மொழியுடன் கூடிய ஊர்கள் வேறும் உள்ளன. நாகர்பட்டினத்திற்குத் தெற்கே நீர்முளை என்றொரு ஊரும் உண்டு. அதுபோன்று 'நீர்ப்பேர் வடக்கே உள்ளது.

'நீர்ப்பெயற்றெல்லையைத் தாண்டிச் சென்றால் பட்டினத்தை அடையலாம் என்றதால் காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கே அமைந்த இடம் நீர்ப்பெயற்றெல்லை என்றாகின்றது. அவ்விடம் எது?

'நீர்ப்பெயற்றெல்லை என்றால் என்ன? அதன் பொருள் யாது? பொருளைக் காண்பதில் ஒரு சிறு சிக்கல் உள்ளது. அந்தச் சிக்கலை எடுத்தால் ஒரு வரலாற்றுப்பெயர் வெளிப்படும். -

'நீர் + பெயற்று + எல்லை என்னும் மூன்று சொற்களில் பெயற்று என்பதுதான் சிக்கலானது. இச்சொல் பெயல் + து என்று பிரிபடும். து விகுதி இடத்திற்கேற்பப் பொருள் கூட்டும். "முதற்றே உலகு" (குறள்) என்பதில் முதல் + து என்பது முதலாக உடையது' என்னும் உடைமைப் பொருளோடு நிற்கும். இயற்று' என்பதில் இயல் + து என்பது இயங்க வைப்பது என்னும் வினைப் பொருளைத்தரும்.

பெயற்று எல்லை என்றதில் பெயல் + து - பெயலை உடைய எல்லை என்று பொருள் கொள்வதை விட பெயலைச் செய்யும் எல்லை என்னும் பொருள் கொள்வதே பொருந்துகின்றது.

நீர்ப்பெயற்று' என்பதற்கு நீர்ப்பெயர்த்து (15) என்னும் பாட வேறுபாடு உ.வே.சா. அவர்களால் காட்டப்பட்டுள்ளது.

நீர்ப்பெயர்த்து என்னும் பாடம் மற்றோர் வகையில் பொருந்து கின்றது. இதற்கு நீர்ப்பெயரை உடையது என்றொரு பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/44&oldid=584926" இலிருந்து மீள்விக்கப்பட்டது