பக்கம்:நாகப்பட்டினம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 . . நாகபட்டினம்

"காவிரிப் பட்டினம் കlജകെന്ദ്ര என்றஅத் துவுரை கேட்டுத் துணிந்திவண் இருந்தது" (31) என்று கூறினான்.

பின்னர்தான் புகார் கடலுள் மூழ்கியது. அவ்வழிவால் இடருற்ற மாதவி அறவண அடிகளுடன் வஞ்சி மாநகர் அடைந்தாள். இதனையும் மணிமேகலைக் காப்பியம்,

"மாநகர் கடல்கொள - بع அறவன அடிகளும் தாயரும் ஆங்குவிட் - டிறவா திப்பதிப் (வஞ்சிநகர்) புகுந்தது" (32) - என்று தீவதிலகை கூற்றாகக் காட்டுகிறது. பட்டின அழிவுக் காலம் -

இவற்றையெல்லாம் கொண்டு நோக்கினால் காவிரிப்பூம் பட்டினம் கடல்கோளால் அழிவுற்ற நிகழ்ச்சி,

1. மணிமேகலை துறவுற்று மணிபல்லவத் தீவில் இருந்த போது - -

2. மாதவி துறவுற்றுக் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தபோது - 3. மாசாத்துவான் காவிரிப்பூம்பட்டினத்தில் துறவுற்று அதனை நீங்கி வஞ்சி மாநகர் புக்கிருந்தபோது - என்பவற்றுடன்

4. சேரன் செங்குட்டுவன் கண்ணகியார்க்குக் கோட்டம் எடுத்து வழிபாடு செய்ததற்குப் பின்னர் என்பதையும் உணரலாம். இவை கொண்டு காவிரிப்பூம்பட்டினம் அழிவுற்ற காலக் கட்டத்தை ஒரு வட்ட அளவிற்குள் கொள்ள முடிகிறது.

அவ்வட்டம் எது? சேரன் செங்குட்டுவன் கண்ணகியார்க்குக் கோட்டம் அமைத்து வழிபட்ட விழாவில் இலங்கை மன்னன் முதல் கயவாகுவும் கலந்து கொண்டான். அவன் இலங்கை சென்று அங்கு கண்ணகியார்க்குக் கோட்டம் அமைத்தான். இதுபோன்று சோழமன்னன் நெடுமுடிக் கிள்ளியும் கண்ணியார்க்குச் சோழநாட்டில் கோட்டம் எடுத்தான். சோழ நாட்டில் ஏங்கு எடுத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/54&oldid=584936" இலிருந்து மீள்விக்கப்பட்டது