பக்கம்:நாகப்பட்டினம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 - நாகபட்டினம்

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஒரு புத்தக் கோட்பாட்டறிஞர் புகழ்பெற்றார். அவரை ஆய்ந்த மேலையறிஞர் தி. வாட்டர்சு (TWattersu) என்பார் அவ்வறிஞரைப் "பிற்காலப் புத்தத்தின் வியப்புகளில் ஒன்று" என்றார். அவ்வியப்பைத் தந்தவரின் பெயர் "நாகார்ச்சுனர். இவர் கவிஞருமாவார். இவரைத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் என்பர். நாகர் பெயரமைக்கப்பெற்ற இவர் பெயரால் நாகார்ச்சுனகொண்டா என்னும் பெயர் பெற்ற புத்தத்திருவிடம் குண்டுர் மாவட்டத்தில் அமைந்தது. அங்கு பின்னர் எழுந்த நாகார்ச் சுனசாகர் நாடறிந்த ஒன்று. -

"திந்நாகர் என்னும் பேரறிஞர் திகழ்வு பெற்றார். இவர் தோற்றத்தில் புத்தமதச் சார்புடையராகிப் பின்னர் "நாத்திகர்" என்றே குறிக்கப்பட்டார். இவர் தமிழர்.

கன்னடத்தில் நாகவர்மா என்பார் கன்னட மொழிக்கு இலக்கணம் வகுத்தவர். இவர் 6ஆம் நூற்றாண்டினர்.

நாகச்சந்திரன் என்பவர் ஒரு தீர்த்தங்கர். நாககுமாரன் பற்றி நாககுமார காவியம் தமிழில் படைக்கப்பட்டது.

இவ்வாறு தாக்கத்தால் அறிஞர் தோன்றினார் நாகப்பெயரில். தமிழ் மண்ணில் நாகர் பெயரில் தொன்மையராகத் தென் படுபவர் முரஞ்சியூர் முடிநாகராயர். இவர் பெயரில் முழு உருவம் முடிநாக அரையர். அரையர் என்பது ஒரு வகைக் குறுநில மன்னரைக் குறிக்கும். இவர் அக்குடியில் தோன்றியவராகலாம். முன்னே அடைமொழியாக உள்ள முடி' என்பதும் அதனை வலியுறுத்தும். இதில் நாக என்பது முடிநாக, என்பதால் முடியில் பாம்பு சூடியவர் என்றாகாது, அரையர் பின்னிருப்பதால் இதனால் சிவனையும் குறிக்காது. -

இவரைத் தொடர்ந்து நாகனார் எனும் பெயரில் சிலர், தீன்மிதி நாகனார், மருதன் இளநாகனார், வெண்நாகனார், அம்மெய்யன் மகன் நாகனார், நாகன் மகன் போத்தனார், எழுஉப்பன்றி நாகன் குமரனார், முப்பேர் என்னும் ஊரினரான நாகனார், நாலை கிழவன் நாகன் என்னும் ஒரு செல்வக்கோமான் என்றெல்லாம். புலவர், புரவலர் பெயர்கள் கிடைக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/74&oldid=584956" இலிருந்து மீள்விக்கப்பட்டது