பக்கம்:நாகப்பட்டினம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 69

பண்டாரத்தாரும் (1) மேலை நாட்டறிஞர் டுபிரெயில் (2) என்பாரும் கண்டெழுதியுள்ளனர். பல்லவர் ஆட்சியும் இப்பட்டினத்தைக் கொண்டிருந்தது. பட்டினத்துள் அரச அரண்மனை இருந்திருக்கு மானால் அரசு அலுவலர் அங்கு தங்கியிருப்பர். இல்லாமையால்தான் பட்டின எல்லையில் பாடி வீடமைத்துத் தங்க நேர்ந்தது.

எனவே எவ்வகையில் நோக்கினும் நாகர்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகப் பட்டினமே யன்றித் தலைநகராக இருந்த தில்லை. மேலும் இதற்கொரு சான்று கூறலாம். சோழர் தலைநகர்கள்

முற்காலச் சோழர்காலத்தில் உறையூரும், பூம்புகாரும் சோழ நாட்டுத் தலைநகர்களாக விளங்கின. பிற்காலச் சோழர் காலத்தில் தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும், ஆயிரந்தளி என்னும் பழையாறையும், சில ஆண்டுகள் கும்பகோணம் எனப்படும் குடமூக்கும் தலைநகர்களாக விளங்கின.

தலைநகராக இல்லை என்பதால் இதற்குக் குறை ஒன்றும் இல்லை. தலைநகர்ப் பெருமையைவிட பலமடங்கு துறைமுகத்தால் பெருமை கொண்டது. இதனை இராசராசன், முதல் இராசேந்திரன் கடாரம், இலங்கை முதலிய கடல்கடந்த நாடுகளைத் தம் கடற்படை மூலம் படையெடுத்து வென்ற பெருமைகளே பேசும். பூம்புகார், அழிவிற்குப் பின்னர் உரோமானியர், சீனநாட்டார், பர்மியர், சுமத்திரர், அரபியர் முதலியோர் வந்திறங்கிச் செய்த வணிக வரலாறு பளிச்சிட்டுக் காட்டும். சோழநாட்டுத் தூதுவர் கீழை நாடுகளுக்கும் சீனாவிற்கும் இத்துறைமுகம் வழியே சென்று தொடர்பு கொண் டமையும் ஆழமாகச் சொல்லும். சோழநாட்டு வணிகக் குழுவினர் பல்வகைத் தமிழ்நாட்டுப் பண்டங்களுடன் கீழை நாடுகட்கும், சீனாவிற்கும் கலத்திற் சென்று செய்த பெருவணிகம் விளக்கும்.

அவ்வாறானால் நாகை எவரெவர் ஆட்சியினால் ஆளப்பட்டது? தொடக்கத்தில் குறித்தது போன்று காலவட்டத்தில் நான்கு வகையானவர் ஆட்சியில் இருந்தது. கால வரிசையில் ஒவ்வொன் றாகக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/87&oldid=584969" இலிருந்து மீள்விக்கப்பட்டது