பக்கம்:நாகப்பட்டினம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 73

எனவே, சோழர் ஆட்சி நிலவாத காலத்திலும் இது துறைமுகமாக இருந்துள்ளதால் எக்காலத்தில் எவர் ஆண்டாலும் அவர் ஆட்சியில் நாகை இருந்ததாகக் கொள்ள வேண்டும். ஆனால், அவரில் எவரும் நாகைக்கு வந்ததாகக் கொள்ள எந்தச் சான்றும் இல்லை. அவர்கள் கவனப்பார்வை பட்டிருக்கும் என்றே கொள்ள வேண்டும். r

இடைக்காலப் பாண்டியருள் இறுதியாக மாறவல்லவன் மகன் இரண்டாம் வரகுணன் கி.பி. 862-இல் பல்லவருக்கு அடங்கினான். இதனால் நேர்முகமாக 18 ஆண்டுகள் பல்லவர் சோழ நாட்டை ஆண்டனர். பல்லவர் தமிழ் மண் மைந்தரல்லர். வடபுலச் சார்பினர்.

3. முத்தரையர் ஆட்சி - (840)

இக்காலக் கட்டத்தில் அஃதாவது கி.பி. 840 அளவில் முத்தரையர் என்பார் வல்லத்தைத் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டனர் . இம்முத்தரையர் தமழ் மண்ணின் மைந்தர். இதனை உணர "அரையர்' என்னும் சொல்லின் விளக்கம் கூறல் ஓர் இடைச்செய்தியாகிறது. "தமிழ் முத்தரையர் கோவை" என்றொரு நூல் இருந்து மறைந்து விட்டது. இப்பெயரில் முத்தரையரைத் தமிழ் முத்தரையர் என்று குறித்திருப்பதும் முத்தரையர் தமிழ் மண் மைந்தர் என்று காட்டுகிறது.

"அரையம் என்றால் பக்கமலை. அப்பகுதி ஊரும் அரையம் எனப்பெறும். சிற்றரையம். பேரரையம் என்னும் இரு ஊர்ப் பெயர்களை முன்னரும் கண்டோம். பெருவேந்தரால் ஆட்சி அதிகாரம் பெற்றோர் அரையர் எனப்பெற்றனர். இன்னோரை ஓரளவில் சிற்றரசர் எனலாம்.

சங்ககால இறுதியில் உருவான 'பழமொழி என்னும் நூலை எழுதியவர் முன்றுறையரையர் என்பார். இதிலுள்ள அரையர் என்னும் சொல்லும் இதனையே அடையாளங் காட்டுகிறது. இன்றும் முத்தரைய இனத்தார் உள்ளனர். முத்தரையர் சங்கம் அமைத் துள்ளனர். இந்த அரையர்' என்பது ராஜன் என்னும் வடசொல்லின் தமிழ் ஒலிப்பு அன்று. தூய தமிழ்ச் சொல்லே.

இவ்வகையில் பாண்டிய மன்னரால் முத்துக்குளித்தல், முத்து வணிகம் முதலிய முத்துத் துறைக்கு ஆட்சி அதிகாரியாக அமர்த்தப் பட்டவர் 'முத்தரையர் எனப்பட்டார். இம் முத்தரையர் வளமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/91&oldid=584973" இலிருந்து மீள்விக்கப்பட்டது