பக்கம்:நாடகங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 (என்று கூறிச் செல்கிரு.ர். அப்போது வானெலி கேட்கிறது.)

மன்ன! மனங்கலங்காதிரு. அவளுக்கு வாய்த்த மணவாளன் வருகின்றபோது அந்த வேண்டாத உறுப்பு மறைந்துவிடும். அதுவரை அவள் நாணம் என்பதை அறியமாட்டாள். ஆணுக்கு ஆணுக வளர்வாள். இந்த அகிலமெல்லாம் கட்டி ஆள்வாள்.

(ஆனந்தக் கண்ணிரோடு, தெய்வமே துணையாக மண்டபத்திலிருந்து குழந் தையை எடுத்துக்கொண்டு அரசனும் அரசியும் அரச மாளிகைக்குப் புறப் படுகிரு.ர்கள்.) காட்சி எண். 15 அரச மாளிகை அரச மாளிகையில் குழந்தைக்குத் தொட்டி லிடுகின்றனர். பிள்ளைத்தமிழ் பாட்டாகிறது. தாலப் பருவம், முத்தப் பருவம், அம்புலிப்பருவம், சப்பாணிப் பருவம், செங்கீரைப் பருவம், எனப் பாட்டுத் தொடர, மீனாட்சி வளர்ந்து ஒடி ஆடும் குட்டிப் பெண்ணுகிருள். ஆடும் குதிரை, யானே முதலிய மரப்பாவைகளும், அவள் வயதுப் பிள்ளே களும் அம்பலம் அழகனடி என்ற காவலர்களும் அவளுக்குத் துணையாகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/102&oldid=781493" இலிருந்து மீள்விக்கப்பட்டது