பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - * 105

அச் சொற்களுக்குரிய சிறந்த பொருள் ஏதும் இருப்பதாகக் காணவில்லை. பழைமையான சிறப்பினையுடைய தூய்மையான பொருள் மட்டுமோ, அத்துடன் தவம், கல்வி, ஆள்வினை என்று சொல்லப்படும் இவைகளாலும் கூடி அமைவதே நல்ல குலமாகும்.

‘நல்ல குலம் என்பது ஆள்வினையுடையதாயிருக்கும் குலமேயாகும் என்று, தாளாண்மையின் சிறப்புக் கூறப்பட்டது.

196. ஆற்றுந் துணையும், அறிவினை உள்ளடக்கி, ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் குறிப்பின்கீழ்ப் பட்டது, உலகு.

தாம் ஒரு செயலை முற்றவும்செய்து முடிக்கும் அளவும், அதனைச் செய்வதற்குத் தமக்குள்ள அறிவுத் திறனைத் தம்முள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டு, தம்முடைய முயற்சியினைப்பற்றிப் பிறருக்கு அறிவுடையவர்கள் சொல்லித் திரியவே மாட்டார்கள். பிறருடைய மனவலிமையினை அவர்களுடைய உறுப்புக்களின் நிலைமையினால் ஆராய்ந்து அறிகின்ற அறிவுநுட்பம் உடையவர்களின் ஏவுதலுக்கு அடங்கியதாக இருப்பதே இந்த உலகமாகும்.

197. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை,

மதலையாய், மற்றதன் வீழுன்றி யாங்குக், குதலைமை தந்தைகண் தோன்றில், தான்பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். கறையானால் அரிக்கப்பட்டுவிட்ட ஆலமரத்தை, அதனின்றும் தோன்றி இறங்கியுள்ள விழுதானது தாங்கும் தூணாக நின்று தாங்கி நிற்பதுபோலத், தளர்ச்சி உடைமை தந்தையினிடத்து உண்டானால், அவன் பெற்ற புதல்வன் தன்னுடைய முயற்சியினால் அதனை மறைக்க, அது நீங்கிப் போகும். -

‘தன்னையே யன்றித் தன் முன்னோர்களையும் பெருமைப் படுத்த வல்லது தாளாண்மை’ என்பது கூறப்பட்டது. 198. ஈனமாய், இல்லிருந்து, இன்றி, விளியினும்,

மானந் தலைவருவ செய்பவோ - யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகை யவர்?