பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நாலடியார்-தெளிவுரை

217. கழுநீருள் காரட கேனும், ஒருவன்

விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம், -விழுமிய குய்த்துவையார் வெண்சோறே யாயினும், மேவாதார் கைத்துண்டல் காஞ்சிரங் காய். அரிசியைக் கழுவிய கழுநீரிலே சமைத்த கறுத்த இலைக்கறியே யானாலும், ஒருவன் சிறப்புடையதாகக் கருதி ஏற்றுக் கொண்டால் அதுவே அவனுக்கு அமுதமாக விளங்கும். சிறந்த முறையிலே தாளிதஞ் செய்யப்பெற்ற கறிவகைகளோடும், துவையல்களோடும் கூடிப் பெற்ற வெண்மையான சோறே என்றாலும், அன்பில்லாதவர் கையிலிருந்து பெற்று உண்பது என்பது எட்டிக்காயைத் தின்பதுபோலக் கசப்பாகவே யிருக்கும்.

‘உணவின் சுவையும் தருபவரின் நட்புத் தகுதி பற்றியே கருதியே கொள்ளப்படுவதாகும் என்பது கருத்து. குய்-தாளிதம்.

218. நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணியர் ஆயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானுஞ் சென்று கொளல் வேண்டும், செய்

வினைக்கும் வாய்க்கால் அணையார் தொடர்பு.

நாயின் காலிலேயிருக்கின்ற சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கமுடையவராக விளங்கினாலும், ஈயின் காலளவாகவாவது உதவாதவர்களுடைய நட்பு என்ன பயனுடையதாகும்? வயல்களை விளையப் பண்ணுகின்ற வாய்க்காலைப்போல, ஒருவர்க்கு உதவுபவர்களது தொடர்பானது தொலைவிலுள்ள தென்றலும் அதனையே தேடிப்போய்ப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

‘நெருக்கமுடையவராயிருந்தும் சிறு உதவியும் செய்யாதவரை வெறுத்து, எட்டியிருந்தாலும் உதவும் பான்மையுடையவரின் நட்பினைத் தேடிப் பெறுக’ என்பது கருத்து.

219. தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்

விளியா அருநோயின் நன்றால், அளிய இகழ்தலின் கோறல் இனிதே மற்று இல்ல புகழ்தலின் வைதலே நன்று.

தெளிவான அறிவு இல்லாதவர்களுடைய நட்பினைக் காட்டிலும் அவர்களுடைய பகைமையே ஒருவனுக்கு நன்மை