பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 125

236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்,

விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா; பெருநீரார் கேண்மை கொளினும், நீரல்லார் கருமங்கள் வேறு படும்.

ஒரே தண்ணிரிற்றானே பிறந்து, ஒன்றாகவே வளர்ச்சி அடைந்த காலத்துங்கூட, மலர்ந்து விளங்கி மணங்கமழுகின்ற நீலோற்பல மலர்களை ஆம்பல் மலர்கள் ஒருபோதும் ஒப்பாவதில்லை. அதுபோலவே, மிகுதியான நற்குணம் உள்ளவர்களுடைய நட்பைப் பெற்றிருந்தாலும், குணம் அற்றவர்களுடைய செயல்கள், எப்போதும் வேறுபட்டவை களாகவே விளங்கும்.

“குணவான்களோடு கூடியிருக்கிறாரே” என்று நினைத்துங் “குணமற்றவரை நட்பினராகக் கொண்டு விடக்கூடாது” என்பது கருத்து. .

237. முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை

நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. பருவ முதிர்ச்சி அடையாத சின்னஞ் சிறு பெண் குரங்கு தனக்கு முன்னரே செயலில் ஈடுபட்டுள்ள தன் தந்தையைப், பயற்ற நெற்றைக் கண்டாற்போல விளங்கும் தன் கைவிரல்களால் அப்பாலே தள்ளிவிட்டுத், தான் குற்றியைப் பெயர்த்து எடுத்துக் கொண்டிருக்கும் படியான, மலைகளை உடைய நாட்டின் தலைவனே! மனத்தால் ஒன்றுபட்டு ஒற்றுமை கொள்ளாதவர் களுடைய நட்பானது என்றும் துன்பத்தையே தருவதாகும்.

‘மன ஒற்றுமை கொள்ளாதார் நட்பு கூடாநட்பு’ என்பது கூறப்பட்டது.

238. முட்டுற்ற போழ்தின் முடுகி; என் ஆருயிரை

நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான் கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க! நெடுமொழி வையம் நக:

என்னுடைய நண்பன் ஒருவன் முட்டுப்பாடு அடைந்த பொழுதிலே, விரைந்து என் அருமையான உயிரையும், அந்த நட்புச் செய்த அவனுக்காகத் தந்து உதவாமற் போனேனாயின், மிகுந்த பேர்பெற்ற உலகத்திலுள்ளோர் எல்லாரும்