பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் . 3

அறத்துப்பால

உயிர்கள் அனைத்தும் உய்தி அடைவதற்கு உரிய

உறுதியைத் தருவன நான்கு என்பார்கள் சான்றோர். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

அறம், பொருள், இன்பம் என்ற இம்மூன்றினும், இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றினையும் தருவது அறம் எனவும், இம்மை மறுமை என இரண்டினையும் தருவது பொருள் எனவும், இம்மை ஒன்றையே தருவது இன்பம் எனவும் கூறுவர்.

இதனால், மூன்றும் தருவதாகிய சிறப்புப் பற்றி அறம் முதற்கண்ணும், அடுத்துப் பொருளும், அடுத்து இன்பமும் தகுதிபற்றிய முறையினாலே வரிசைப்படுத்தி நிறுத்தப் படுவனவாயின.

இவ்வகையிலே, முதற்கண், ‘அறம்’ பற்றிக் கூறும் செய்யுட்கள், அதிகாரத்துப் பத்துப் பத்துச் செய்யுட்களாகப் பதின்மூன்று அதிகாரங்களுள் அமைக்கப்பட்டன. இவற்றுள் முதல் ஏழும் துறவற இயலையும், பின் ஆறும் இல்லற இயலையும் உரைப்பன.

‘அறம் மூன்று வகைப்படும். அவை, ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்பன.

‘வழக்கு என்பது, ‘தான், தனது என்பதன் காரணமாக, உயிர்கள் ஒருவருக்கொருவர் தமக்குள் மாறுபட்டு ஒன்றின்மேற் செல்லுதல். இது பதினெட்டு வகைப்படும்.

‘தண்டம்’ என்பது ஒழுக்க வழக்கமாகிய நெறிகளி னின்றும் தவறினவர்களை, மீண்டும் அந்தந்த நெறிகளிலே நிறுத்துவதன் பொருட்டு விதிக்கும் தண்டனைகளாம்.

மேற்கூறிய வழக்கும் தண்டமும் உலகை நல்லவழியிலே செலுத்துவதற்குப் பயன்படுவனவாம்.

‘ஒழுக்கம் ஒன்றுதான் உயிர்க்கு நிலையான உறுதி தருவது. அதனால்,அந்தச் சிறப்புடைய ஒழுக்கமே, சிறப்புடைய அறமாக இந்நூலுள்ளும் முதற்கண் அமைக்கப்பட்டிருக்கின்றது.