பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 157

‘செல்வராவதும் வறியவராவதும் ஊழ்வினைப் பயனால் வருவது. கொடுத்தல் அறம் என்று கருதாமல், தன்னாலேயே அவன் வாழ்கின்றான் எனக் கருதும் செருக்குடைய செல்வரை நாடி, அறிவுடையோர் ஒருபோதும் செல்லமாட்டார்கள்’ என்பது கருத்து.

302, இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்

பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ? விழித்திமைக்கும் மாத்திரை யன்றோ, ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு

ஒருவன், இழிவுக்குக் காரணமான செயல்களைச் செய்து வயிறார உண்டு வாழ்வதனைக் காட்டினும், பிறர் பழிக்கும்படியான செயல்களைச் செய்யாதவனாகப் பசியோடு வருந்தியிருத்த்ல் தவறாகுமோ? எனில் ஆகாது. ஒரு மனிதன், தன்னுடைய இந்த உடலை அழித்துவிட்டு மீண்டும் புதிய உடலெடுத்துப் பிறக்கும் பிறப்பு, கண்மூடித் திறக்கும் ஒரு மாத்திரை அளவான காலத்திற்றானே நிகழக்கூடியது அல்லவோ?

‘உடல் போனால் அடுத்த நொடியே வேறு உடல் கிடைக்கும்; ஆனால், பழிச் சொற்களோ தொடர்ந்து வரும். அதனால் பழிதருகின்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது’ என்பது கருத்து.

303. இல்லாமை கந்தா இரவு துணிந்து ஒருவர் செல்லாரும் அல்லர், சிறுநெறி! -புல்லா, ‘அகம்புகுமின், உண்ணுமின் என்பவர்மாட் டல்லால், முகம்புகுதல் ஆற்றுமோ, மேல்? தம்மிடத்தே சூழ்ந்த வறுமையின் காரணமாகத் துணிந்து ஒருவர் இரத்தலாகிய அற்பமான வழியிலே செல்லாமலும் இருக்கமாட்டார்கள். ஆனால் அப்படி இரக்க நேரிட்டாலும், மேலானவர்கள், தம்மைத் தழுவிக் கொண்டு, ‘வீட்டினுள் வாருங்கள்: உண்ணுங்கள்’ என, அன்போடு உபசரிப்பவர் களிடத்திலே அல்லாமல், மற்றவர்களிடத்திலே செல்வதைப் பொறுப்பார்களோ? பொறுக்க மாட்டார்கள் என்பது முடிவு.

‘இரப்பதேயானாலும், மனமுவந்து ஈபவரிடத்திலே மட்டும் சென்று இரந்துண்க; பிறரிடத்துச் செல்லாதிருக்க’ என்பது கருத்து. .