பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 163

பெற்றுக் கொண்டானாம்; அவன், அப்படிப் பெற்றுக் கொண்ட அந்தச் சூத்திரத்தினை, நல்ல புலவர்களின் அவையிலே புகுந்து தன் பேதைமைக்கு நாணாமல் எடுத்துச் சொல்லித் தன்னுடைய கீழ்த்தரமான அறிவையே வெளிப்படுத்தி விடுபவனாவான்!

‘அப்படிச் சொல்லவும், அவனுடைய புல்லறிவு பலரும்

அறிந்ததொன்றாய்விடும் என்பது கருத்து.

315. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்,

கன்றிக் கறுத்தெழுந்து, காய்வாரோடு-ஒன்றி, உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள் சுரைவித்துப் போலுந்தம் பல்.

‘பிறரை வென்றுவிட வேண்டும்’ என்ற ஒரே ஒரு காரணத்தினாலே, விலங்கினைப் போன்று உண்மைப் பொருள்களை ஏற்றுக் கொள்ளாதவர்களாகி மிகவும் சினங் கொண்டு போருக்குத் தயாராக எழுந்து, மனங்கொதிப்ப வர்களோடு சேர்ந்து, தம்முடைய சொல்லின் வித்தாரத்தைக் காட்ட எழுகின்றவர், சுரையின் வித்துப் போன்ற தம்முடைய பற்கள் தம் கையில் உடனே கிடைக்கக் காண்பவராவார்கள்.

“மூடர்களுக்கு நல்லுபதேசம் செய்யப் போனால், போகிறவரின் பல் உடைவதுதான் நேரிடும்; அவர்கள் கேட்டுத் திருந்தார்’ என்பது கருத்து.

316. பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத

மூடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை ஈன்றாட்கு இறப்பப் பரிந்து. ஒரு பாட்டின் வாய்ப்பாடத்தை மட்டுமே சொல்லிக் கொண்டு, அதன் பொருள் நுட்பத்தைக் தெளிவதிலே மனஞ் செலுத்தாத மூடர்கள், கேட்பவர் சினங்கொள்ளத்தக்க சொற்களைச் சொல்லும் பொழுது, அழிவில்லாத மேன்மையை யுடைய சான்றோர்கள், அப்படி வைதவரைப் பெற்ற தாயைக் குறித்து மிகவும் இரக்கப்பட்டு, அவர்களை அந்தவிடத்திலேயே தக்கப்படி ஒறுத்தற்குத் துணியாமல், தாம் வெட்கினவராகிப் பொறுமையுடன் இருப்பார்கள்.

‘மூடனின் பேச்சை மறுத்து உரையாமல் சான்றோர் வாளாவிருப்பது, அவன் தாயை நினைந்து இரக்கப்பட்டே’ என்பது கருத்து.

... •.