பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 25

விளங்கும் தருமங்களையும் நாம் மிகுதியாகவே தேடிக்கொள்ள வேண்டும். கரும்பானது பக்குவமாகத் தன்னை ஆலையிலிட்டு நசுக்கியவர்களுக்குத், தன்னிடத்திற் பொருந்திய சாற்றைக் கொடுத்து இன்புறுத்துவது போலவே, தருமங்களும் உடலை வருத்தித் துறந்தவர்களுக்கு மறுமையிலே சிறந்த இன்பத்தைத் தந்து உதவி செய்யும். இந்த உடலோவென்றால், சாறுபோன கரும்பின் சக்கையைப் போல, உயிர் போனபின் பயனற்றுக் கழித்துப் போடப்படுவதாகிவிடும்.

கருப்பஞ்சாறு போலத் தரும காரியங்களிலே ஈடுபடுபவர்க்கு அறமானது உதவும்; ஆனால், அப்படி அறஞ் செய்யாத உடலோ ஒன்றுக்கும் உதவாது போய்விடும் என்பது கருத்து. பயத்தால் பயனால், ஊர்ந்த உண்டானபின் - இங்கு மறுமை இன்பத்தைக் குறிக்கும்.

35. கரும்பாட்டிக், கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பெழுந்து வேங்கால் துயராண்டு உழவார்; வருந்தி உடம்பின் பயன்கொண்டார், கூற்றம் வருங்காற் பரிவது இலர்.

கரும்பை ஆலையிலே வைத்து நசுக்கி வெல்லக் கட்டியினை முற்காலத்திலே எடுத்துக் கொண்டவர்கள். பின்னர் அதன் சக்கையாகிய துரும்பு நெருப்பிலே பொருந்தி வேகும்பொழுது, அவ்விடத்தே அதனைக் கண்டு, கொஞ்சமும் துயரப்படமாட்டார்கள். அது போலவே உடம்பினை இச்சைகளுக்கு ஆட்படாமல் வருத்தி, உடம்பினாலாகும் உண்மைப் பயனான அறநெறிகளைக் கைக்கொண்டவர்கள், கூற்றமானது தம்மீது வருகின்ற காலத்திலே, உடம்பை விடுவது குறித்து வருத்தம் அடையமாட்டார்கள்.

கரும்பின் பயன் சாறு, அதனைப் பெற்றவர் சக்கை எரிவது கண்டு வருந்தார். அதேபோல, உடம்பின் பயன் நல்வினை செய்தல்; அதனைச் செய்தவர் சாவுக்கு வருந்தார்; செய்யாதவரோ வருந்துவர் என்பது கருத்து. கட்டி - வெல்லக் கட்டி துரும்பு கரும்புச் சக்கை பரிவது வருந்துவது.

36. இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்?’ என்னாது,

‘பின்றையே நின்றது கூற்ற'மென் றெண்ணி ஒருவுமின், தீயவை, ஒல்லும் வகையான் மருவுமின் மாண்டார் அறம்.