பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 33

கண்டு, ‘இற்றிதன் வண்ணம் என்பதனால், பண்டத்துள் வைப்பது இலர். உயிர் போய்விட்டவர்களுடைய வெண்மையான தலை

எலும்புகள், பிறர் அச்சம் கொள்ளும்படியாகச் சிரித்துச் செம்மாந்து, உடலின்பத்திலே மூழ்கியிருப்பவரின் இறுமாப்பாகிய குற்றத்தைத் தீர்க்கும். ஆதலால், அப்படிக் குற்றம் தீர்ந்தவர்கள். ‘இதன் குணம் இப்படிப்பட்டது என அறிந்து உடலைப்பற்றித் தெரிந்து கொள்வதனால், தம் உடலை ஒரு பொருளாகக் கருதிப் பேணிப் புனைந்துவைக்க மாட்டார்கள்.

‘உடலின் தன்மையை அவர்கள் உணர்ந்துவிடுவதனால் அதனை ஒரு பொருளாகக் கருதி, அதன் சுகபோகங்களிலே மனஞ்செலுத்த மாட்டார்கள் என்பது கருத்து.

6. துறவு

வாழ்க்கை நெறி இரண்டு வகைப்படும். ஒன்று இல்லறம் மற்றொன்று துறவறம். இல்லறம் - இல்லத்திலே மனையா ளோடு கூடி இன்புற்றிருந்து இனம் பெருக்கி, உறவு முறை யாருடன் கூடி மகிழ்ந்து அறம்பல செய்து நற்கதி பெறுவது.

துறவறம்-செல்வமாகிய புறப்பற்றையும் உடலின்பமாகிய அகப்பற்றையும் அறவே விடுத்து, உயிரின்பங் கருதி உறுதியுடன் மேற்கொள்ளும் ஒழுக்கம். ‘எனது, யான் என்ற இருவகைப் பற்றுக்களையும் விட்ட நெறி இது.

உடல் எடுத்துப் பிறந்துள்ளதன் நோக்கம், உயிருக்கு உறுதிப் பொருளை நாடுவதேயாகும். அதனால், அந்த அளவிலே சிறப்புடையதானதுறவுநெறியைச் சான்றோர் பலரும் மேற்கொள்வார்கள். அதனைப் பற்றிக் கூறுவது இந்தப் பகுதி.

பற்றுக்களின் மீது வசப்படும் மனிதன் நன்மை தீமைகளைப் பகுத்தறிய இயலாதவனாகி விடுகிறான். அது பற்றிப், பற்றற்றவனே சிறந்த ஒன்றை மேற்கொண்டவன் ஆகிறான்.

51. விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு, ஒருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம்,-விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம், தீது,