பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாலடியார்-தெளிவுரை

தாமும் அப்படிச் செய்யாமையினை, ஆற்றலில்லாமை என்று அறிவுடையோர் கருதவே மாட்டார்கள். ஆதலால், அப்படிப் பகைவர்களும் பொறுமையின்றி எதிர்த்துக் கொடுமையான செயல்களைச் செய்த காலத்தும் தாங்கள் அவர்களுக்கு மீட்டும் அப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்யாமலிருப்பதே நன்மை தரும் பண்பாகும்.

‘வீரர்க்குத் தம்மை எதிர்த்தாரை அழிப்பதே பண்பு; ஆனால், துறவியர்க்கோ அது பண்பாகாது; பொறுப்பதே பண்பு” என்பது கருத்து. மாற்றார்-மாறுதல் உடையவர்; பகைவர்.

68. நெடுங்காலம் ஓடினும், நீசர் வெகுளி

கெடுங்காலம் இன்றிப் பரக்கும்; - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே, சீர்கொண்ட சான்றோர் சினம்.

கீழ்மக்களுடைய சினமானது நெடுங்காலம் ஓடினாலும் கூட அதற்கு ஒர் அழிவு காலம் இல்லாமல் மென்மேலும் வளர்ந்து கொண்டே போகும். காய்ச்சும் பொழுது நீரானது கொண்ட வெப்பத்தைப் போலச் சீர்மையான உள்ளத்தைக் கொண்ட சான்றோர்களின் சினமானது, பிறரால் ஆற்ற வேண்டாமல் தானே சிறிது நேரத்தில் வெப்பம் அடங்கி ஆறிப்போய் விடும்.

‘கீழ்மக்கள் அறியாமை காரணமாக வரும் அகந்தையுடையவர். அதனால், அவர் கொண்ட சினம் நாளுக்கு நாள் அவர்பால் வளரும். சான்றோர் சினமோ முதலிலே கொதிப்படைந்தாலும் அவரது உள்ளச் சீர்மை காரணமாகக் காலப்போக்கில் தானாகவே ஆறிப்போய் விடும்’ என்பது கருத்து. நீசர்-கீழ்மையான குணத்தினர்.

69. உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்

அபகாரம் ஆற்றச் செயினும்,-உபகாரம் தாம்செய்வ தல்லால், தவற்றினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க்கு இல், தனக்குச் செய்த உபகாரத்தினை நினையாமல்,

தம்மிடத்திலே அபகாரத்தையே ஒருவன் மிகுதியாகச்

செய்தானானாலும், அவனுக்குத் தாங்கள் மீண்டும் உபகாரமே

செய்வதல்லாமல், பிசகியுங்கூடத் தீமையைச் செய்யத்