பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - நாலடியார்-தெளிவுரை

பொறுமையுடன் ஏற்றுத் தம் குற்றம்தெளிதல் சொல்லப் பட்டது. மாதர்-அழகிய மலிகடல்-நிறைந்த கடல்,

74. அறிவது அறிந்தடங்கி, அஞ்சுவது அஞ்சி,

உறுவது உலகுவப்பச் செய்து-பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது.

அரிய வேண்டிய நன்மை தீமைகளைப் பற்றிய நுட்பங்களை எல்லாம் அறிந்து அடக்கம் உடையவராகி, அஞ்சி ஒதுங்குவதற்குரிய பழிச்செயல்களுக்கு அஞ்சி ஒதுங்கித், தமக்கு நேர்ந்த காரியத்தை உலகம் உவக்குமாறு முறையே செய்து இன்பமுற்று வாழுகின்ற இயல்பினை உடையவர்கள், எப்போதும் துன்பமுற்று வாழ்தல் என்பதே அரிதாகும்.

‘நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, பொறுமையுடன் தம் வாழ்வினை மேற்கொண்டு நடப்பவர்களுக்கு என்றும் துன்பம் நேர்வதில்லை என்பது கருத்து.

75. வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்

தேற்றா வொழுக்கம் ஒருவன்கண் உண்டாயின். ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின் தூற்றாதே, தூர விடல் இரண்டுபேர் தம்முன் வேற்றுமை இல்லாமல் கலந்து நட்புக் கொண்ட காலத்திலே, அவர்களுள் நம்பத்தகாத தீய ஒழுக்கம் ஒருவனிடத்தில் உண்டாகுமானால், மற்றவன் தன்னால் பொறுக்கக்கூடிய அளவுவரைக்கும் பொறுக்கக் கடவன்; அப்படிப் பொறுக்க மாட்டானாயின் அந்த நண்பனைத் துாற்றாமல் அவனுடைய நட்பை மட்டும் தூரமாக ஒதுக்கிவிடக் கடவன். -

‘நண்பனிடத்துத் தீய நடத்தை உள்ளதென்று பின்னர் அறிந்தால் பொறுக்கும் அளவுக்குப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும். அந்த அளவினைக் கடந்த போதும், அவன் நட்பை விட்டு விடலாமே அல்லாமல், பொறுமையிழந்து அவனைப் பலரும் அறியத் தூற்றுதல் கூடாது என்பது கருத்து. தேற்றாநினைத்ததற்கும் அரிய தெளிவற்ற.

76. இன்னா செயினும், இனிய ஒழிக” என்று,

தன்னையே தானோவின் அல்லது.-துன்னிக்

கலந்தாரைக் கைவிடுதல், கானக நாட!

விலங்கிற்கும் விள்ளல் அரிது!