பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 51

துன்பம் பயக்குமால், துச்சாரி நீகண்ட இன்பம், எனக்கெனைத்தால்? கூறு.

- பிறர் காண நேர்ந்தால், செல்பவனுக்கு மட்டுமல்லாது. அவன் குடும்பத்திற்கே பழிச்சொல் ஏற்படும். கையோடு அகப் பட்டுக் கொண்டாலோ காலையே முறித்துவிடுவார்கள். மாட்சியற்ற அந்தச் செயலைச் செய்யுங்காலத்து எழும் அச்சமோ மிகுதியாகும். அந்தச் செயல், நெடுங்காலம் அநுபவிக்கும்படியான நரக வேதனையையும் தரும். ஆகவே, தீய செயலிலே ஈடுபடுபவனே! நீ அதனாற் கண்ட இன்பம் எவ்வளவோ? எனக்குச் சொல்வாயாக

‘அதனால் விளைவது அத்தனையும் இம்மையினும் மறுமையினும் துன்பமே. அதனால், அதன்பால் மனஞ் செலுத்துதல் கூடாது’ என்பது கருத்து. எனைத்தால் - எவ்வளவினதோ?

85. செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்,

கொம்மை வரிமுலையாள் தோண்மரீஇ-உம்மை வலியாற் பிறர்மணைமேற் சென்றாரே இம்மை அலியாகி ஆடிஉண் பார்.

ஒருவகையான நல்ல நடத்தையும் இல்லாமல், கீழானவர்களோடு சேர்ந்தவர்களாக, திரட்சியையும் தொய்யிலையும் உடைய முலைகளை உடையவளது தோளைச் சேரவிரும்பி, முன் பிறவியிலே, தம் வலிமையினால் பிறருடைய மனையாளிடம் சென்ற பாவிகளே. இந்தப் பிறவியிலே ஆண் தன்மை அற்றுப் போனவர்களாகிக் கூத்தாடிப் பிச்சையெடுத்து உண்பவர்களான பேடிகள் ஆவர்.

கொம்மை-இளமையும், அழகும் வன்மையும், பருமையுமாம். முற்பிறப்பில் தமக்குள்ள வலிமையால் பிறர் மனைவியரைக் கூடி இன்புற்றவர்கள், இப்பிறப்பில் அலிகளாகிக் கூத்தாடிப் பிழைக்கிறார்கள்; அவர்களைக் கண்டாவது உள்ளது தெளிவு கொள்க’ என்பது கருத்து. அலி-பேடி. ஆண்மையும் பெண்மையும் அற்ற அலித் தன்மை கொண்ட உருவம் மரீஇ - மருவி; விரும்பி,

86. பல்லார் அறியப் பறையறைந்து, நாள்கேட்டுக்,

கல்யாணஞ் செய்து, கடிபுக்க-மெல்லியல்

காதன் மனையாளும் இல்லாளா, என்னொருவன்

ஏதின் மனையாளை நோக்கு?