பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - நாலடியார்-தெளிவுரை

எழாமலே தடுத்துக் கொள்ளல் வேண்டும் என்பது கருத்து. உருகெழு-உருவம் விளங்குகின்ற அச்சம் விளைவிக்கின்ற. செந்தி-கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பு.

10. ஈகை

வறுமையால் வாடியவர்களாக வந்து இரந்து நிற்பவர்களுக்குத் தம்மிடம் உள்ளதை இல்லை என்று சொல்லாமல் கொடுத்தலே ஈகை ஆகும். இதனால், அவரது வறுமையாலான துன்பம் தீர்வதுடன், அப்படி வழங்கியவர்களுக்கு இம்மையிற் புகழும், மறுமையில் இன்பமும் வாய்ப்பனவாகும் என்பர் சான்றோர்.

வறுமையில் வாடியவர்க்குத் தருவது மட்டுமே உண்மையான ஈகையாகும். அவரால் மீட்டும் எந்த உதவியையும் செய்யமுடியாது. ஆதலால் அல்லாதாரான பிறருக்கு தருவதெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து’ என்றாற் போலப் பின்வரும் பெரு நன்மைகளை எதிர் பார்த்துச் செய்யப்படுவனவே யாகும். ஈகை’ என்று சொல்லப்படாது.

இல்லறத்தான், தன் முயற்சியினால் பாடுபட்டுச் சேமித்துத் தேடிய செல்வத்தை, இப்படி வறியவர்கட்கு வழங்குதலைத் தன் கடமைகளுள் ஒன்றாகக் கருதிக் கொள்ளுதல் வேண்டும் என்பது குறித்துக் கூறுவது இந்தப் பகுதியாகும்.

91. இல்லா இடத்தும், இயைந்த அளவினால்

உள்ள இடம்போல் பெரிதுவந்து, - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு அடையாவாம்? ஆண்டைக், கதவு.

தம்மிடத்தே கொடுத்து மகிழ்தற்குத் தக்க அளவற்ற செல்வமானது இல்லாத காலத்தினும், நம்முடைய நிலைமைக்கு இசைந்த மட்டிலும், செல்வமுள்ள காலத்தைப் போலவே பெரிதும் மனமுவந்து, அமைதியாகக் கொடுத்து உதவுதலோடு சேர்ந்த ஈகைக் குணமுடைய மனிதர்களுக்குச் சுவர்க்கமாகிய அவ்விடத்துக் கதவு எப்போதும் அடைக்கப்படாததாகத் திறந்தே இருக்கும். -

‘இரப்பவர்க்கு, ‘இல்லை’ என்று சொல்லாமல் கொடுக்கும் ஈகையாளரின் வருகையை எதிர்நோக்கி, மேலுலகத்தவர் கதவைத் திறந்து வைத்துக் காத்திருப்பார்கள்