பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 69

விளைவு முடிந்து விடுவதும் இல்லை. இந்தப் பிறப்பினை விட்டபோதும், அது ஈட்டிய பழவினையாகப் பிற்பிறவிகளினும் தொடர்ந்து வந்து பற்றுவது என்றோம். மேலும், அதனால் உயிருக்கு ஏற்படும் மறுமையின் துயரங்களையும் முன்னர் பார்த்தோம். இவ்வாறு, உயிரைத் தொடர்ந்து பற்றி வருத்தும் இயல்பு உடையது தீவினையாதலால், அதனை அனைவரும் செய்யாது நீக்க வேண்டும்; அதனைச் செய்யும் முனைப்பு சில சமயங்களிலே ஏற்பட்டாலும், அதன் பின்விளைவுகளை உணர்ந்து அஞ்சி அதனை நீக்கவேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் பகுதி இது.

121. துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கள் பிணத்த, சுடுகாடு; -தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே, புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு.

சம்சார வாழ்வாகிய துன்பங்களில் கிடந்து உழன்று தங்கியிருந்தவர்களாக, அவற்றைத் துறந்து உயிர்க்கு உறுதி தரும் துறவுநெறியின் கண் சேரமாட்டாத மனிதர்களுடைய பிணத்தைச் சுடுகாடுகள் மிகுதியாக உடையனவாகும். நல்ல அறிவுத்திறனை இழந்துபோன புலானுண்ணும் அற்ப அறிவு உடையவர்களின் வயிறுகளோவென்றால், அவற்றுள் சேர்ந்த தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உரிய இடுகாடு ஆகும்.

இதனால், புலால் உண்ணுதல் ஆகிய தீவினையின் இழிந்த நிலைமை சொல்லப்பட்டது. அதற்கு அஞ்சி அதனை நல்லறிவாளர் நீக்குவர்; பிறரும் நீக்கவேண்டும் என்பது கருத்து.

122. இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்

கரும்பார் கழனியுட் சேர்வர்-சுரும்பார்க்கும்

காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும்

கூட்டுளாய்க் கொண்டு வைப்பார்.

வண்டினங்கள் ஆரவாரிக்கின்ற காட்டினிடத்தே

உள்ளனவாய் வாழுகின்ற கவுதாரியையும் காடையையும் கூடுகளின் உள்ளேயாக இருக்கும்படியாகப் பிடித்து அடைத்து வைப்பவர்கள், இரும்பு விலங்குகள் ஒலிக்கின்ற காலினராகப் பகைவர்களுக்கு அடிமைகளாய்க் கடுமையான வறட்டு நிலத்தினும் வயல்களினும் வேலை செய்யும்படியான நிலையினை அடைவார்கள்.