பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - நாலடியார்-தெளிவுரை

128. உள்ளத்தான் நள்ளாது, உறுதித் தொழிலராய்க்,

கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை-தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட! மனத்துக்கண் மாசாய் விடும். அருவி நீரானது தெளிவுடையதாய்ச், சேற்றை இடைவிடாது ஒழித்து நிற்கின்ற, அழகிய மலைகளையுடைய நாட்டை உடையவனே உள்ளத்தால் விரும்பாது, உறுதியான தொழிலைச் செய்பவராகக், கள்ளத்தனமாகச் சிநேகித்தவர் களுடைய மிகுதியான சிநேகமானது மனத்தினுள்ளேயும் குற்றமுள்ளதாய் நிற்கும்.

129. ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால், ஊக்கம் அழிப்பது உம் மெய்யாகும்;-ஆக்கம் இருமையுஞ் சென்று சுடுதலான், நல்ல கருமமே, கல்லார்க்கண் தீர்வு ஒருவன் பகைவன்மேல் அவனைக் கொல்லுவதற்காக ஓங்கிய ஒளியுடைய வாளானது, அந்தப் பகைவனின் கையிலேயே போய்ச் சேர்ந்து விட்டால், அப்படி ஓங்கிய வலுவுடைய வலிமையை அழிப்பதுவும் உண்மையாகும். தான் மூடருக்குச் செய்த உபகாரமானது, இம்மை மறுமை என்ற இரண்டிடத்தும் சென்று தம்மை வருத்துதலால், கல்வியறி வில்லாத மூடர்களிடமிருந்து நீங்கியிருப்பதும் ஒரு நல்ல செயலேயாகும்.

130. மனைப்பாசம் கைவிடாய்! மக்கட்கென்று ஏங்கி, எனைத்துழி வாழ்தியோ? நெஞ்சே! -எனைத்தும் சிறுவரையே யாயினும், செய்தநன்று அல்லால், உறுபயனோ இல்லை, உயிர்க்கு.

நெஞ்சமே! மனையாளிடத்திலேயுள்ள ஆசையைக் கைவிடமாட்டாய். மக்களுக்குப் பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டுமென்று ஏங்கி எவ்வளவு காலந்தான் பொருள் முயற்சியிலேயே வாழப் போகிறாய்? சிறிதளவான காலமேயானாலும், எவ்வளவாவது செய்து நல்ல செயல்களே அல்லாமல், உயிருக்கு அடையும்படியான நற்பயன் வேறு எதுவுமே இல்லை என்பதை அறிவாயாக.

அறத்துப்பால் முற்றும்.