பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் . 75

ஆடை, உடலை வளைத்துச் சூழ்ந்திருப்பதால் கொடுந்தானை எனப்பட்டது. மஞ்சள்-மகளிர்க்குரிய பூச்சு. இதனால் கல்வி ஆடவர் மகளிர் ஆகிய இருவருக்கும் அழகு தருவது என்பது கூறப்பட்டது. .

132. இம்மை பயக்குமால், ஈயக் குறைவின்றால்,

தம்மை விளக்குமால், தாமுளராக் கேடின்றால், எம்மை உலகத்தும் யாங்காணேம், கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. . . கல்வியானது, இம்மை என்று சொல்லப்படும் இந்தப் பிறவியின் பயனாகிய உறுதிப் பொருள்களையும் தரும். செல்வத்தைப் போலல்லாமல் கொடுக்கக் கொடுக்கக் குறைவு படாமல் மென்மேலும் வளர்ந்துகொண்டே போகவும் செய்யும். அதனையுடைய ஒருவரைப் புகழ் என்னும் பெருமையால் நெடுந்தொலைவுக்கு விளக்கமுறச் செய்யும் சக்தியும், அதற்கு உண்டு. தாம் உயிருள்ளவராக வாழும் அளவும் கல்வி அழிதல் இல்லாது நிலைபெற்றுத் தம்முடன் விளங்கும். ஆதலால் கல்வியைப் போல அறியாமையாகிய நோயை ஒழிக்கின்ற ஒரு மருந்தினை யாம் எத்தன்மையான உலகத்தினும் காண்கின்றோ மில்லை. . ,

கல்வி, அறியாமையைப் போக்கி அறிவை வளர்க்கும். பிற செல்வங்களோ அறிவை மறைத்து அறியாமையை வளர்ப்பன. ஆகவே, கற்றல் மிகவும் சிறப்புடையது என்பது கூறப்பட்டது.

133. களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்; கடைநிலத்தோர் ஆயினும், கற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப் படும்.

உவர் நிலத்திலே தோன்றிய உப்பினை நல்ல விளை நிலத்தின் விளைந்த நெல்லினைக் காட்டினும் சிறப்புடையதாகச் சான்றோர் கொள்வார்கள். அங்ஙனமே கடையான பகுதியிலே பிறந்தவர்கள் ஆனாலும், கற்று அறிவுடையவர்களாக விளங்கு பவர்களை, மேன்மையான பகுதியிலே வைத்துப் பெருமைப் படுத்துவார்கள் அறிவுடையோர்.

உயர்வும் தாழ்வும் பிறப்பால் அமைவனவன்று;

கல்வியறிவால் அமைவனவே என்பது கருத்து. கடை நிலம்,

தலைநிலம் என்பன தாழ்ந்த நிலையிலுள்ள குடியினர், உயர்ந்த நிலையிலுள்ள குடியினர் ஆகியோரை இங்கே குறிக்கும். .