பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - நாலடியார்-தெளிவுரை

நல்ல மலைகள் பொருந்திய நாட்டை உடையவனே! போய்க் கொண்டிருக்கும் இடத்திலே ஒருநாள் கண்டு பழகினாலும், அவர்களைப் பழைமை வழியினாலே வந்த சிநேகம் போலத் தோன்றும்படியாக உபசரித்துத் தம்முடன் அவரை அன்புடையவராகப் பிணித்துக் கொள்வார்கள் மேன்மக்கள். சில நாட்கள் காலடி பட்டதென்றால், கல்மலையினும் வழி உண்டாகும் அல்லவோ?

‘கல்லிலும் சில நாட்கள் காலடிபட்டால் வழி உண்டாகிறது. அதுபோலச் சிலநாட் பழகினால் எவரும் சினேகிதராகலாம். ஆனால் மேன்மக்களோ ஒருநாட் கண்டாலும் அவர்மீது கனிந்த அன்பு பாராட்டுவர் என்பது கருத்து.

155. புல்லா எழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவன் உரைப்பவும், கண்ணோடி நல்லோர் வருந்தியும் கேட்பாரே, மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து.

பொருள்களின் தன்மையை அறியும் அறிவில்லாத பயனற்ற சபையைச் சேர்ந்தவனும், கற்கவேண்டிய நூற்களைக் கல்லாதவனுமான ஒருவன், தனக்குத் தோன்றிய ஒரு பொருளைப் பொருந்தாத சொற்களால் எடுத்துச் சொல்லவும், மேன்மக்கள், அதனைக் கேட்க நேர்ந்ததற்காக வருத்தப்பட்டு அவன் பலர் முன்பாக அவமானப்பட்டு நிற்றலைக் காண்பதற்கு மனமில்லாமல், அவன்மீது தாட்சணியம் வைத்து, அவன் அப்படிச் சொல்வதைத் தாமும் காது கொடுத்துப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

“மூடர்கள் பேசுவதைப் பெரியோர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே என்றால், அது அவர்கள்மீது கொண்ட இரக்கத்தினால் என்று பெரியோர்களின் பெருமையைக் கூறுவது இது.

156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி

இடித்து, நீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்; வடுப்பட வைதுஇறந்தக் கண்ணும், குடிப்பிறந்தார் கூறார், தம் வாயிற் சிதைந்து. கரும்பினை வாயினாற் கடித்தும், கணுக்கள் நொறுங்கும் படியாக ஆலையிலிட்டுச் சிதைத்தும், உலக்கை முதலியவற்றால் இடித்தும், அதனுடைய சாற்றை எடுத்து உட்கொண்டாலும்,