பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நாலடியார்-தெளிவுரை

159. பன்னாளும் சென்றக்கால், பண்பிலார் தம்முழை, ‘என்னானும் வேண்டுப’ என்றிகழ்ப;-என்னானும் வேண்டினும் நன்றுமற்று என்று, விழுமியோர் காண்டொறுஞ் செய்வர், சிறப்பு. மேன்மையான குணம் தம்மிடத்திலே இல்லாதவர்கள், ஒருவர் அடுத்தடுத்துப் பலநாளும் அவர்களை நாடிச்சென்ற காலத்தில், இவர் யாதாயினும் ஒன்றை நம்மிடமிருந்து பெற விரும்புகின்றனரோ?’ என்று கருதி, அப்படி வருபவரை இகழ்வார்கள். ஆனால், பெரியோர்களோ என்றால், தம்மிடம் வருபவர் யாதேனும் விரும்பினாலும், நல்லதென்று சொல்லி வரும் அவரைக் காணும்போதெல்லாம் அவருக்குச் சிறப்புச் செய்வார்கள்.

‘கீழோர், பலநாளும் வருபவர் ஏதேனும் கேட்பரோ என அஞ்சி, அவர் கேளாமுன்னரே அவரை இகழ்ந்து பேசுவார்கள். மேலோர் அவர் எதனை விரும்பினாலும் அதனைக் கொடுத்து நன்மை செய்வார்கள்’ என்பது கருத்து. இதனால் மேலோரின் மனப்பண்பாடு சொல்லப்பட்டது.

160. ‘உடையார் இவர் என்று, ஒருதலையாப் பற்றிக்

கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல குலந்தலைப் பட்ட இடத்து? ‘இவர் செல்வம் உடையவராக இருக்கின்றாரென்று’ உறுதியாகப் பற்றிக்கொண்டு, கீழ் மக்களின் பின்னாகப் போய்ப் பிழைப்பார்கள் சிலர். அங்ஙனம் வாழ்பவர்கள் நல்ல குடியிற் பிறந்தவர்களைச் சேர்ந்தவிடத்து, நாம் வேண்டும் பொருள் எல்லாவற்றையும் உடையதாயிருக்கிற ஒரு சுரங்கத்தைப் போலிராதா என்று நினைக்க மாட்டார்களோ?

‘செல்வம் உளதோ இல்லையோ மேன்மக்களைச்

சேர்வதே சிறப்பாகும்’ என்பது இது. இதனால், மேன் மக்களுடைய தொடர்பின் பயன் சொல்லப்பட்டது.

17. பெரியாரைப் பிழையாமை

மேன்மக்களின் தொடர்பினால் மனிதர்க்குப் பலப்பல நன்மைகள் உள்ளன. துரயோரும் மேலோருமாகிய அவர்க ளிடத்து எல்லோருமே பணிவும் அன்பும் உடையவர்களாக் , இருக்க வேண்டும். அவர்கள் தொடர்பான செயல்களிலே