பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தியா நடராஜனும் நண்பர்களின் வேண்டுகோளை அன்புடன் ஏற்று நான் இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு உந்துதல் தந்தார். இவர்கள் மூவருக்கும் என் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதும்படியும், விரைவாக எழுதி முடிக்கும்படியும் கடிதங்கள் மூலம் தூண்டிக்கொண்டே இருக்கும் மற்றுமுள்ள நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த நவம்பர் மாதம் எனக்கு 85 வயது நிறைவுபெறுகிறது. எனது மூன்றாவது வயது முதல் என் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ள நினைவுகளை நான் இந்த நூலில் பதிவு செய்திருக் கிறேன். வல்லிக்கண்ணனின் வாழ்க்கைச் சுவடுகள் நூலால் தமிழ் நாட்டின் இலக்கிய, மொழி, சமுதாய, வரலாற்றுச் செய்திகள் தெளிவாகின்றன. அவர் காலத்திய சமுதாய வாழ்வின் சுவடு களாகவும், மக்களின் பண்பாட்டுச் சுவடுகளாகவும் விளங்குவன. அவருடைய எழுத்தின் வரலாறு மட்டுமல்ல, அவர் காலத்திய பிற எழுத்தாளர்களின் எழுத்து வரலாறும் பதிவு செய்யப் பட்டுள்ளன. மானுட நேயத்தின் வரலாறாகவும் விளங்குகின்றது. பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் எனது வாழ்க்கைச் சுவடுகள் நூல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இக்கூற்று நிலைபெற்ற நினைவுகள் எனும் இந்த நூலுக்கு அதிகமாகப் பொருந்தும் நிலைபெற்ற நினைவுகளை இரண்டு பகுதிகளாகச் சிறப்பான முறையில் வெளியிடுகிற சந்தியா பதிப்பகத்துக்கு என் நன்றி உரியது. சென்னை வல்லிக்கண்ணன் 3.1 05