பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டியன எல்லாம் செய்யப்படட்டும் ೯Tip' அம்மா சொல்லி விட்டாள். பதினாறாம் நாள் விசேடம் (கருமாதி விசேஷம்) வெகு சிறப்பாகச் செய்யப்பட்டது. பெரும்பணம் செலவாயிற்று பணத்தைப் பத்திக் கவலை இல்லை. செய்ய வேண்டிய சடங்கு எதுவும் குறையக் கூடாது. அவுக சம்பாதித்த பணம் தானே. அவுகளுக்குச் செலவாகாமே பணம் இருந்து எதுக்கு? என்று அம்மா சொல்லிவிட்டாள். ஆகவே சாவு செலவுகள் தாராளமாக நடந்தேறின. பிள்ளைமார் குடும்பங்களில் கல்யாணத்துக்கும் சாவுக்கும் எக்கச்சக்கமா செலவு செய்தே, கடன் வாங்கியாவது செலவு பண்ணியே தீரனும் என்று அடம் பிடித்தே அநேக குடும்பங்கள் நஷ்டப்பட்டு, பிற்காலத்தில் கஷ்டப் பட்டிருக்கு என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்வது உண்டு. எங்கள் குடும்பத்தின் கதையும் அதுவே ஆயிற்று. ஒருவர் இறந்த திதிப்படி மாதந்தோறும் 'மாசியம் கொடுக்க வேண்டும். வருட முடிவில் ஆட்டத் திதி என்று ஆண்டுத் திவசம் ஆர்ப்பாட்டமாகச் செய்ய வேண்டும். இது வேளாளக் குடும்பங்களின் நம்பிக்கையும் செயல்முறையாகவும் இருந்தது. ஒவ்வொரு மாதமும் பஞ்சாங்க ஐயர் முன்னதாகவே வந்து, இன்ன கிழமை திதி வருது: மாசியத்துக்கு எல்லாம் ரெடி பண்ணி வையுங்கோ. நான் காலையிலேயே வந்துவிடுவேன் என்று சொல்லிப் போவார். எங்கள் குடும்பத்துப் பஞ்சாங்க ஐயர் ஒரு அய்யங்கார் வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உருண்டு திரண்ட உருவம் முதல் நாளே வந்து இன்று ஒதுக்கல், நாளை மாசத் திதி என்று நினைவுபடுத்திச் சென்றார். திதியன்று சிரித்த முகத்தோடு, என்னா, எப்படி இருக்கிறேள் என்று விசாரித்தபடி வந்து அமர்வார். அவர் முன் மூன்று தலைவாழை இலைகள் பரப்பப்படும். ஒவ்வொன்றும் இரட்டை இலையாக அதாவது ஆறு இலைகள். மூன்று இலைகளிலும் தனித்தனியாக காய்கறி வகைகள், பச்சரிசி, அச்சுவெல்லம் நவதானிய வகைகள் என்று தாராளமாகவே படைக்கப்பட்டிருக்கும். அம்மா இதிலெல்லாம் கஞ்சத்தனம் காட்டியதேயில்லை. அவர் கும்பாவில் மாவை நீரிட்டுப் பிசைந்து பிண்டங்கள் பிடித்து, மந்திரங்கள் சொல்லி, செய்யவேண்டியவற்றை இப்படி இப்படிச் நிலைபெற்ற நினைவுகள் 3; 109