பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரியிடம் கெஞ்சிக் கேட்டு பெரிதான கைமணி ஒன்றை இரவல் பெற்றிருந்தான். துணைவன் பெரிய பெட்டி வைத்திருந்தான். நமக்கு பெட்டியிலே முக்கால்வாசி அரிசி கிடைத்தாலே போதும் அதை கொட்டிவைக்க சாக்குத் தேவையில்லை. ராப்பாடி பஐதெருக்களில் பிச்சை கேட்பதனாலே, அவனுக்கு அரிசி அதிகம் சேரும். அவ்வப்போது பெட்டியிலிருப்பதை கொட்டி வைக்க அவனுக்கு சாக்கு தேவை தான். நமக்கு வேண்டாம் என்று குற்றாலம் தீர்மானித்துச் செயலாற்றினான். திருநீற்றைக் குழைத்து நெற்றியில் பட்டை பட்டையாகப் பூசிக் கொண்டு, அதன் மேல் அகலப்பொட்டு ஆகக் குங்குமத்தை அப்பி வைத்தான். இன்னொரு வேட்டி கொண்டுதலை மீது பெரிய முண்டாசு கட்டிக் கொண்டான். வேசம் பிரமாதம் என்று நண்பர்கள் பாராட்டினார்கள். துணை ஆளும் தகுந்த வேடம் தரித்து பெட்டியை எடுத்துக் கொண்டான். சிறிதாக ஒரு துணிப்பந்தம் செய்து, எண்ணெயில் முக்கி எடுத்து அதில் தீயைக் கொளுத்தினார்கள். துணைவன் அதையும் பிடித்துக் கொண்டான். தெருவின் ஒரு முனையிலிருந்து தொடங்கினார்கள் அவர்கள். குற்றாலம் ராப்பாடி பிச்சைக்காரன் போலவே ஒங்கிய குரலில் பாடியபடி மணியை ஆட்டியவாறு மெதுவாக நடந்தான். சுடுகாடு இடுகாடு கற்றி வந்தேன் நான் கடலையிலே நின்று ஆடி வந்தேன்; நான் சூனியங்கள் வைத்திடுவேன் வைத்த சூனியம் எடுத்திடுவேன் நான் புதைச்ச பிள்ளையின் மூளையை உருகிடுவேன் எரிபிற பிணத்தின் குடவை எடுத்திடுவேன் நான் இடுகாடு சுடுகாடு சுற்றிவாறேன்! ற ற இதை திரும்பத் திரும்பப் பாடியவாறு நடந்தான் குற்றாலம். 114 : வல்லிக்கண்ணன்