பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்நகரசபையில் நல்ல லைபிரரி ஒன்றும் இருந்தது. அதில் தமிழ் நூல்களும் ஆங்கிலக் கதைப் புத்தகங்களும் நிறைந்திருந்தன. அந்த நூலகத்திலிருந்து உறவினர் தமிழ் நாவல்கள் எடுத்து வந்து கொடுத்தார். அந்நாள்களில் தமிழ் படிக்கத் தெரிந்தவர்களில் நாவல் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கத் தவறாத புத்தகங்கள் வடுவூர் துரைசுவாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதை நாயகி அம்மாள். ஜே. ஆர். ரங்கராஜ ஆகியோர் எழுதிய நாவல்கள் அனைத்தும் நகரசபை நூலகத்தில் இருந்தன. அவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்துப் படித்து முடித்திட வேண்டும் என்று நண்பர்கள் தீர்மானித்தார்கள். வடுவூர் துரைசுவாமி ஐயங்காரின் துப்பறியும் நாவல்கள் கும்ப கோணம் வக்கீல் அல்லது திகம்பரசாமியாரின் துப்பறியும் லீலைகள் திவான் பகதூர் லொடபட சிங்', 'காளிங்க ராயன் கோட்டை ரகசியங்கள் வெண்கலச் சிலை அல்லது கன்னியின் முத்தம்' போன்றவை கதைச் சுவையுடன் விறுவிறுப்பாக அமைந்திருந்தன. வடுவூராரின் ரசமான வர்ணனைகளும் விவரிப்புகளும் படிப்பவர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டும். ஆகவே நண்பர்கள் நேரம் கிடைத்த போதெல்லாம் நாவல்களை படித்தார்கள். ராத்திரியில் வெகுநேரம் வரையிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் பகலில் கூடியிருந்தும் தொடர்ந்து படித்தார்கள். புத்தகத்தை சீக்கிரம் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக, ஒருவர் உட்கார்ந்து நாவலைப் படிப்பார். மற்றவர்கள் சுவரில் சாய்ந்தபடியும், தரைமீது படுத்தவாறும் கேட்டு ரசிப்பார்கள். சற்று நேரம் சென்றதும் இன்னொருவர் வாசிப்பார். இப்படி முறைவைத்துப் படித்து நாவல் முழுவதையும் விரைவில் முடித்துவிடுவார்கள். அவர்கள் இவ்விதம் வாசித்த போது நானும் கதைகேட்டு ரசித்தேன். அவர்கள் படிக்காத வேளைகளில் புத்தகம் சும்மா கிடக்கும். அது போன்ற சமயங்களில் அதை எடுத்துப் படிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்படி அந்தக் காலத்துப் பிரபல நாவல்கள் பலவற்றையும் நான் படித்து மகிழ முடிந்தது. நாவல் படிக்கிற விஷயத்தில் சுவையான சமாச்சாரம் ஒன்றும் கலந்திருந்தது. இரவு நேரங்களில் படிப்பதற்கு விளக்கு வேண்டும். நிலைபெற்ற நினைவுகள் 3; 117