பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்து நடத்திய சுதந்திரச் சங்கு, பிற்காலத்தில் தினமணி நாளிதழ் ஆசிரியராகப் பணிபுரிந்த டி.எஸ். சொக்கலிங்கம் நடத்திய காந்தி, மற்றும் மணிக்கொடி ஜெயபாரதி ஆகிய வார இதழ்கள் காலணா விலையில் எங்கும் பரவின. இவற்றில் சுதந்திரச் சங்கு வேகமான நடையில், உணர்ச்சிகரமாக விஷயங்களை எழுதி, நன்கு கவனிப்புப் பெற்றது. நாங்களும் இவ் இதழ்களையும், சிறு பிரசுரங்களையும் வாங்கிப் படித்தோம் தாங்கள் பள்ளி செல்லும் பாதையில், தெற்கு பஜாரில், எடுப்பாக கிராமபோன் கடை ஒன்று இருந்தது. அந்தக் கடையில் சதா பிளேட்டு களை ஒடவிட்டு பாடல்களை ஒலிக்கச் செய்தவாறு இருப்பார்கள். கிராமபோன் பெரிய வடிவில், ஊமத்தம் பூ வடிவப் பெரிய குழாய் பொருத்தப்பட்டதாக அமைந்திருக்கும். ஆரம்பகாலத்தில் போனோ கிராம் என்று அப்பெட்டிகள் பெயர்பெற்றிருந்தன. படிப்பறிவு பெற்றிராதவர்களும், கிராமவாசிகளும் அதை பூனக்கிராப் பெட்டி என்றே குறிப்பிட்டு வந்தார்கள். கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகள், ஓடியன் ரிக்கார்டுகள் அந்நாள்களில் பிரபலமாக இருந்தன. கொலம்பியா கம்பெனி, நீண்ட நேரம் ஒடக் கூடிய பெரிய அளவு இசைத் தட்டுகளைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்பிய புதுசு அதில் கே.பி. சுந்தராம்பாள் பாடிய பாடல்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. பக்திப் பாடல்களுடன் தேசபக்திப் பாடல்களும் இசைத்தட்டுகளாக வந்தன. ஆடு ராட்டே - சுழன்றாடு ராட்டே', 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி போன்ற பாடல்கள் மிகுந்த கவனிப்பைப் பெற்றிருந்தன. ஜவகர்லால் நேருவின் தந்தை பண்டித மோதிலால் நேரு மரணமடைந்த போது கொலம்பியா ஒரு ரிக்கார்டு வெளியிட்டது. பறிகொடுத்தோமே - மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே! என்று கேபி. சுந்தராம்பாள் பாடியது. பாடல் எழுதியவர் உருக்கமாக, உணர்ச்சிகரமாக எழுதியிருந்தார். அத்துடன் சாதாரண ஜனங்களுக்குப் புரியாத தன்மையிலும் சில வரிகள் அதில் இடம்பெறச் செய்திருந்தார். பிரபுடீக உமது தேகம் - வியோகமானதே என்ற வரி ஆழமாக என் நினைவில் பதிந்திருக்கிறது. பள்ளிக்கூடம் போகிறபோதும், பள்ளி விட்டு வருகிற போதும் 124 : வல்லிக்கண்ணன்