பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்புறம் வந்த பாம்பே ஷோக்கள் திருநெல்வேலி டவுனுக்கும் ஜங்ஷனுக்கும் இடைப்பட்ட வெளியில் - வயல்புறத்தில் மைதானம் அமைத்து காட்சிகள் நடத்தின. ராட்டினங்கள், ராட்சசச் சக்கரங்கள் (ஜயன்ட் வீல்) என்று மேலேறிச் சென்று கீழிறங்கும் சுழல் ராட்டினம் போன்றவற்றோடு, பணம் பிடுங்கும் சூதாட்டக் காட்சிகளும் மிகுதியாக இருந்தன. கிராமங்களில் இருந்தெல்லாம் காட்சி பார்க்க வந்து, ஆசைப்பட்டு சூதாட்ட விளையாடல்களில் ஆழ்ந்து அதிகமாகப் பணத்தை இழந்து சென்றவர்களின் எண்ணிக்கை மிகுதியாயிற்று. திருநெல்வேலியில் கணபதி விலாஸ் தியேட்டர், மனோரமா தியேட்டர் என்று இரண்டு நாடகக் கொட்டகைகள் இருந்தன. அவ்வப்போது நாடகக் குழுவினர் வந்து இவற்றில் தங்கி நாடகங்கள் நடத்துவர். நிரந்தரமான நாடகக் குழுவினர் - பாய்ஸ் கம்பெனி - அல்லாத தனிப்பட்டவர்களின் ஸ்பெஷல் அமைப்புகளும் நாடகங்கள் நடித்துக் காட்ட வந்து சேரும் இத்தகைய அமைப்புகளில், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், எஸ்.வி. சுப்பையா பாகவதர், கே.எஸ். செல்லப்பா, கே.எஸ். அனந்த நாராயணன், சி. எஸ். சாமண்ணா போன்ற கீர்த்தி பெற்ற நடிகர்கள் வந்து நாடகங்கள் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள். நடிகர்களிடையே போட்டி ஏற்படுவதும் உண்டு. சிதம்பரம் சிங்கக்கூட்டி சி.எஸ். ஜெயராமனுக்கும், புளியமாநகர் புலிக்குட்டி பி.எஸ். கோவிந்தனுக்குமிடையே போட்டி நிலவியது. யார் பாட்டுப் பாடுவதில் தேர்ந்தவர்கள் என்று காட்டிப் பெயர் பெறுவதில் இவர்கள் நாட்டம் செலுத்தினார்கள். நாடகக் குழுக்களில், ஆர்மோனியம் வாசித்து சங்கீதம் பாடுவதில் கே. எஸ். தேவுடு அய்யருக்கும் காதர் பாட்சாவுக்கும் போட்டி ஏற்படும் மிருதங்கம் வாசிப்பதில், கோடையிடி கொச்சி ரீதர ராவ் என்பவர் பெயர் பெற்றிருந்தார். முறையான நாடகக் கம்பெனிகளாக வந்தவை - பாய்ஸ் கம்பெனி எனப் பெயர் பெற்றவை - பலவும் மதுரையைச் சேர்ந்தவை என்றே காட்டிக்கொண்டன. மதுரையைத் தலைப்பாகக் கொண்டு நீளம் நீளமான பெயர்களை அவை வைத்திருந்தன. இப்படி நீளப் பெயர் வைப்பது நாடக உலகில் ஒரு மரபாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். மதுரை தத்துவ வித்தக ரீ மீனலேசனி சங்கீத நாடக சபை, 132 : வல்லிக்கண்ணன்