பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று அவரே சுயவிளம்பரம் செய்து சபையோரிடையே கலகலப்பை ஏற்படுத்தினார். உற்சாகிகள் நடத்துகிற நாடகங்களில் இப்படிப்பட்ட தமாஷ்கள் தாமாகவே தோன்றும் பார்க்கிறவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். 1932இல் பாளையங்கோட்டையில் அதிவிசேஷ நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நகரத்துக்கு மட்டுமின்றி, திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டாரத்து ஊர்கள் அனைத்துக்குமே முக்கியத்துவம் வாய்த்த நிகழ்ச்சியாக இருந்தது அது. பாளையங்கோட்டைக்கு ஏரோப்ளேன் வந்தது. ஹைகிரவுண்ட் பரப்பில் தங்கி நின்றது. பல ஊர்களிலிருந்தும் திருவிழாக் கூட்டம் போல் ஜனங்கள் வந்து பார்த்து மகிழ்ந்தார்கள். ஆகாய விமானம் சர்வசாதாரணமாகியிராத காலம் அது. இப்போது கூட பாளையங்கோட்டை - திருநெல்வேலி ஆகாய வெளியில் ஒரு விமானம் பறந்து செல்வது அபூர்வ நிகழ்ச்சி தான். அதிசயம் போல் எப்போதாவது விமானம் தென்படும். அவ்வளவுதான். ஹைகிரவுண்ட் என்பது பாளையங்கோட்டைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரம் தள்ளியிருந்த மேட்டுநிலப்பரப்பு பொட்டல் பெருவெளியாய் பரந்து கிடந்தது. புல் வகைகள், தும்பை, கொழிஞ்சி போன்ற செடிகள் முளைத்து, பார்வை படும் துரமெல்லாம் வெம் பரப்பாய் தோன்றிய நிலம். கடல்காற்று, திருச்செந்தூர் பகுதி யிலிருந்து வரும் சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த இடம் எனப்பெயர் பெற்றிருந்தது. அதனால் ஒய்வு பெற விரும்பும் நோயாளிகளும், வசதிகள் படைத்த முதியவர்களும் குடும்பத்தோடு வசிக்கும் பங்களாக்கள் அங்கே இருந்தன. ஜில்லாவின் பெரிய பெரிய அதிகாரிகளும் - டிஸ்ட்ரிக்ட் மெடிக்கல் ஆபீசர், டிஸ்ட்ரிக்ட் சூப்பிரன்டென்ட் ஆஃப் போலீஸ், கலெக்டர் போன்றவர்கள். பெரிய பெரிய பங்களாக்களில் வசித்தார்கள். பெரும்பாலும் அவர்கள் வெள்ளையர்களாகவே இருந்தார்கள். இரவு நேரங்களிலும் சனி ஞாயிறுகளிலும் அவர்கள் உல்லாசமாகப் பொழுதுபோக்குவதற்காக இங்கிலீஷ் க்ளப்' என்ற சங்கம் ஒரு தனிக் கட்டிடத்தில் செயல்பட்டது. அங்கே சனி, ஞாயிறு இரவுகளில் வெகுநேரம் வரை வெள்ளைத் துரைமார்களும் துரைசானிகளும் நிலைபெற்ற நினைவுகள் 3; 135