பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருந்தது. அவரைப் பிடிக்காதவர்கள் சிலர் அவரைப் பற்றி மேலதிகாரி களுக்குப் புகார் செய்தார்கள். அவர் தவறான முறைகளில் பணம் சேர்த்திருக்கிறார் என்று சாந்தப்ப பிள்ளை மீது பெட்டிஷன்கள் போயின. அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மேலதிகாரி ஒருவர் சென்னையிலிருந்து வந்தார். சாந்தப்ப பிள்ளை பயப்படவில்லை. நீர் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக சொல்லப்படுகிறதே? நீர் என்ன சொல்கிறீர் என்று அதிகாரி கேட்டார். என் வாழ்க்கையில் நான் பதினாலு லட்சங்கள் சேர்த்திருக்கிறேன் என்று சாந்தப்பர் அமைதியாக பதில் அளித்தார். அவரது பதில் அதிகாரியை திகைக்க வைத்தது. இப்படி ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. அடுத்து, எப்படிப்பட்ட சொத்துக்கள் அவை என்று கேட்டார். 'மூவபிள் பிராப்பர்ட்டீஸ் (அசையும் சொத்துக்கள்) தான் என் பிள்ளை கூறினார். நான் அவற்றை பார்க்க முடியுமா என்று அதிகாரி என் வீட்டுக்கு வந்து எந்நேரமு. AAAAAA AAAA AAAA AAAAee kk TTyyGGGCS பார்வையிடலாம் என்றார் சாந்தப்பர். அதிகாரியும் அவரது உதவியாளரும் உடனே சாந்தப்ப பிள்ளையுடன் புறப்பட்டார்கள். வீடு சேர்ந்ததும், அவர்களை உரிய மரியாதையுடன் வரவேற்று நாற்காலிகளில் அமர வைத்துவிட்டு உள்ளே போனார் பிள்ளை. சிறிது நேரத்தில் அவர் மிடுக்காக வெளியே வந்து அதிகாரி முன் நின்றார். அவரைத் தொடர்ந்து, சுத்தமாக எளிய ஆடைகள் அணிந்து, மலர்ந்த முகத்துடன் தோன்றிய பிள்ளைகள் - ஆண்களும் பெண் களுமாக - பதினான்கு பேர் வரிசையாக வந்து நின்றார்கள். அவர்களின் தாயும் வெளியே வந்தார். அனைவரும் அதிகாரியை வணங்கி நின்றார்கள். எனக்கு பதினான்கு பிள்ளைகள், ஒவ்வொரு பிள்ளையும் எனக்கு லட்ச ரூபாய் சொத்து மாதிரி வேறு சொத்து எதுவும் என் வாழ்வில் நான் சேர்க்கவில்லை என்று சாந்தப்பர் உறுதியான குரலில் சொன்னார். நிலைபெற்ற நினைவுகள் 3; 141