பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது மோட்டார் கார் வந்தது. கூட்டத்தைக் கண்டதும் காரின் வேகம் குறைக்கப்பட்டது. 'லட்சுமி, டவுணுக்குவாறியா? என்று கண்டக்டர் குரல் கொடுக்கவும் அந்தப்பெண் குதித்து ஒடி காரில் ஏறிக்கொண்டாள். மோட்டார் வேகம் எடுத்து ஒடியது. கும்பலும் மெதுமெதுவாகக் கரைந்தது. இது தினசரி நிகழ்ச்சியாயிற்று. அது திருநெல்வேலிப் பெரிய தெருவைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளர் (கைக்காள முதலியார் - கைக்கோளர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தபெண். ஒருதினுசுப் பைத்தியம் ஆனால் லட்சுமிகடாட்சம் பெற்றது. அது கைவைத்துக் காசு எடுத்தால், அந்தக் கடையில் அல்லது ஒட்டலில், அன்று வியாபாரம் பிய்ச்சக் கிட்டுப் போகும் காசுகள் கல்லாவிலே பெருகி வழியும். அதனால் தான் ஒட்டல்காரர்களும் கடைமுதலாளிகளும் அந்தப் பெண்ணை அதட்டி விரட்டுவது மில்லை; போலீசாரிடம் புகார் செய்வதும் இல்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் சொன்னார்கள். தினந்தோறும் இந்தப் பிள்ளை, பேட்டை, திருநெல்வேலி டவுன், ஜங்ஷன், பாளையங்கோட்டை என்று எல்லா இடங்களிலும் கடை களில் புகுந்து காசுகளை அள்ளிவந்து தாராளமாகத் தானம் செய்து வருது, மோட்டார் ட்ரைவர்கள், கண்டக்டர்களின் ஆதரவு இந்த லட்சுமிக்கு அதிகமாகக் கிடைக்குது. இந்தப் பெண் தங்கள் காரில் வந்தால், அன்று பூராவும் பண வசூல் (கலெக்ஷன்) அதிகமாக இருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதுவாக் கைவிட்டு கண்டக்டர் பைக்குள்ளிருந்து காசுகள் எடுத்தால், அன்று வசூல் எக்கச் சக்கமாக இருக்கும் என்று கார் கண்டக்டர்கள் நம்புகிறார்கள். அதனால் தான், லட்சுமி லட்சுமி என்று உபசரிக்கிறார்கள். பெரியவர்கள் இவ்விதம் விவரித்தார்கள். இதிலே முக்கியமான ஒரு விஷயம் உண்டு. அந்தப் பெண்தானாக மனசு வச்சு வந்து கைபோட்டுக் காசு எடுத்துச் சென்றால் தான் கடைக்காரருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் அதில்லாமல் கடைக்காரராகக் கூப்பிட்டு அவள் கையில் காசுகள் கொடுத்தாலோ, அல்லது அவரே அந்தப் பெண்ணின் கையைப் பற்றி கல்லாவில் வைத்து காசுகளை எடுக்கும்படி செய்தாலோ புண்ணியமில்லை. அப்படிச் செய்கிற போது காசுகள் தாராளமாக வந்து சேர்வதில்லை. கடைக்காரர்கள் அனுபவ பூர்வமாக அறிந்த உண்மை இது. அதனாலே தான், கடைக்காரர்களும் ஒட்டல்காரர்களும் அந்தப் பெண்ணாக பிரியப்பட்டு நுழைந்து, 144 : வல்லிக்கண்ணன்