பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடையாது. வகுப்புக்கு நீட்டாக ட்ரஸ் செய்து கொண்டு ஸ்டைலாக வருவான். மகாராஜன் படிக்கவா ஸ்கூலுக்கு வாறான்! சும்மா கல்யாணப் படிப்பு படிக்கத்தான் இங்கே சேர்ந்திருக்கான். அதுதான் ஜம்னு மாப்பிளை மாதிரி கிளாசுக்கு வாறான் என்று தமிழ் வாத்தியார் வீரபாகு பிள்ளை கிண்டல் பண்ணுவார். அவன் சிரித்துக் கொள்வான். எதுவும் சொல்லமாட்டான். மகாராஜன் கணக்கு வாத்தியாரை கலாட்டா பண்ண வேண்டும் என்று தீர்மானித்தான். ஒருநாள் வாத்தியார் கண்ணபிரான் (அய்யர்) பெரிய கணக்கு ஒன்றை, சிரத்தையெடுத்து, கரும்பலகையில் எழுதிக் காட்டி செய்யும் வழியை விளக்கினார். முடிவில் எல்லோருக்கும் புரிந்ததா என்று கேட்டார். மகாராஜன் எழுந்து நின்று அமைதியாக எனக்குப் புரியலே சார் என்றான். என்ன புரியலே? எந்த இடம் புரியலே என்று ஆசிரியர் கேட்டார். ஒண்ணுமே புரியவே சார் கணக்கு ஆரம்பத்திலேயிருந்து எனக்கு எதுவுமே புரியலே சார் என்று அவன் பதிலளித்தான். அவர் அவனை நோக்கியவாறு நின்றார். அவனும் அமைதியாக நின்று கொண்டிருந்தான். சரி இப்ப அடுத்த கணக்கை பார்க்கணும். உனக்கு தனியாச் சொல்லித் தர நேரமில்லே. ஸ்கூல் விட்டதும், டீச்சர்ஸ் ரூமிலே வந்து என்னைப் பார். உனக்கு இன்னும் விளக்கமாகச் சொல்லித் தாரேன். இப்ப நீ உட்கார் என்று கூறி, ஆசிரியர் அடுத்த கணக்கை விளக்கலானார். அவன் மவுனப் புன்னகையுடன் இடத்தில் அமர்ந்தான். அன்று மாலையிலோ, அதற்குப் பிறகோ, மகாராஜன் கணக்கு சார் கண்ணபிரானைக் காண்பதற்காக ஆசிரியர்கள் அறையின் பக்கம் போகவேயில்லை. கணக்கு வாத்தியாரும் அவனை கண்டுகொள்ள சில வாரங்களுக்குப் பிறகு, கண்ணபிரானுக்குப் பதிலாக லோகாச்சாரி என்ற இளைஞர் கணக்குப் பாடம் கற்பிக்க வந்து சேர்ந்தார். கண்ணபிரான் வேறு வகுப்புக்குப் போய்விட்டார். லோகாச்சாரி வேலைக்குப் புதுசு உயர்நிலை வகுப்பு மாணவர் களுக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து அனுபவம் பெற்றிருக்க 148 கிே வல்லிக்கண்ணன்