பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியம்மை ஆம்பிளை வேஷம் போட்டு, படம் பிடித்தால் என்ன என்று தோணிச்சு அப்படியே போட்டோ எடுத்துக்கிட்டேன் என்றாள். இப்படி தனது மகிழ்ச்சிக்காக அவ்வப்போது எதையாவது செய்து கொண்டிருந்தாள் அவள். ஒரு நாள் அவளது விளையாட்டுப் புத்தி விபரீத விளைவில் கொண்டு போய் விட்டது. இருட்டி இருந்தது. இன்னும் ஏழு மணி ஆகவில்லை. வீடுகளுக்குள் மங்கலான விளக்குகள் எரியுமே தவிர, மூன்று வீடுகளுக்கும் பொதுவான முற்றத்தில் விளக்கு எதுவும் கிடையாது. வெளிக்கதவு (கம்பி அளிக்கதவு) சும்மா சாத்தப்பட்டிருந்தது. வடக்கு வீட்டில் பெண்கள் வெளியே தார்சாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று உலகுப் பெரியம்மை திருடன் திருடன் என்று கத்தினாள். மூடி முக்காடு போட்டுக் கொண்டு, வெளிக்கதவை ஒட்டிய சுவர் மூலையில் பதுங்கிக் கொண்டாள். வடக்கு வீட்டுப் பெண்கள் எங்கே எங்கே என்று கத்திக் கொண்டு எழுந்து நின்றார்கள். அடுத்து அவர்கள் என்ன செய்திருப்பார்களோ தெரியாது. யாரும் எதிர்பாராத விதத்தில் செயல்கள் நடந்துவிட்டன. வீடு இருந்த முடுக்கு கோபாலசாமி கீழரத வீதிக்கும், கிழக்குப் பக்கமிருந்த செளராஷ்டிரர் தெருவுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய வழியாக நீண்டு கிடந்தது. ஒரு இடத்தில், வீடுகளுக்கிடையே சிறு வெட்ட வெளி அதை பட்டு நூல்கார இளைஞர்கள் செளராஷ்டிரப் பையன்கள்) தேகப் பயிற்சி செய்யும் இடமாக ஆக்கியிருந்தார்கள். 'பார் விளையாடுவதற்கு வசதியாகக் கம்புகள் நட்டிருந்தார்கள். கரளாக் கட்டை சுழற்றுவார்கள். பஸ்கி, தண்டால் எல்லாம் செய்து மகிழ்வார்கள். 'பட்டுநூல்காரத் தெருவிலிருந்து வருகிற இளைஞர்கள் தவிர, அவர்களில் சிலருக்கு நண்பர்களான வேறு சில இளைஞர்கள் கோபால சாமி கோயில் வீதிகளிலிருந்து இந்தப் பக்கமாக வந்து விளையாடி விட்டுத் திரும்பிச் செல்வார்கள். அன்று, முன்னிரவில், இந்த வீட்டுக்குள்ளிருந்து திருடன் திருடன் என்று பொம்பிளைக் குரல் கூச்சலிடுவதை முடுக்கில் பார் விளையாடி விட்டுத் திரும்பி நடந்து கொண்டிருந்த இளைஞர்கள் கேட்க நேரிட்டது. . ஆண்கள் இல்லாத வேளையில், முன்னிரவு இருட்டு நேரத்தில், எவனோ களவாணிப் பயல் வீட்டு வளைவுக்குள் புகுந்திருக்கிறான்; 160 38 வல்லிக்கண்ணன்