பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தனியாக வைக்க முடியும் வாரத்துக்கு இருமுறை - வெள்ளி, செவ்வாய்களில் - அப்படிக் கழற்றி, விளக்கை உமிகொண்டு நன்கு தேய்த்து சுத்தப்படுத்துவார்கள். பிறகு தண்ணிரில் குளிப்பாட்டி உலர வைப்பார்கள். பின்னர் மெல்லிய துணிகொண்டு, ஈரம் போகத் துடைத்து மீண்டும் அதன் பாகங்களை அடுக்கிப்பூட்டி முழு விளக்காக நிறுத்துவார்கள். அப்போது குத்து விளக்கு குளித்து முடித்து அழகாக நிற்கும் சிறுபெண் போலவே தோன்றும் விளக்குக்குப் பொட்டிட்டு, பூச்சாத்தி தினமும் வணங்கும் பழக்கம் குடும்பப் பெண்களிடம் நிலைபெற்றிருந்தது. அண்ணன் கோமதிநாயகம் 1934ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி முடித்தபிறகு மேசை விளக்கு நான் படிப்பதற்குப் பயன்பட்டது. 1936 மார்ச் மாதம் நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினேன். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தம்பி முருகேசன் ஆண்டு இறுதித் தேர்வு எழுதும் வரை நாங்கள் பாளையங்கோட்டையில் வசித்தோம். அதன் பிறகு நகரத்தில் வசிக்க வேண்டியது அவசியம் இல்லை; வீட்டு வாடகை கொடுத்துக் கொண்டு பாளையங்கோட்டையில் இருப்பது அதிகப்படியான செலவுகளுக்கே வகை செய்யும் என்று தீர்மானித்தோம். ராஜவல்லிபுரம் போய் அங்கேயே வசிப்பது தான் நல்லது என்று முடிவு கட்டினோம். 1936 ஏப்ரல் மாதம் பாளையங்கோட்டையை, நாங்கள் படிப்பதற்காக ஏழு ஆண்டுகள் வசித்த நகரத்தை விட்டுப் பிரிந்து கிராம வாழ்க்கையைத் தொடங்க ஊர் சேர்ந்தோம். 邻售{} 播 அப்பா வேலை பார்த்த காலத்தில் வசித்த வெளியூர்களிலிருந்து, ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறை ராஜவல்லிபுரம் வந்து தங்க நேரிட்டது உண்டு. சில மாதங்கள் அவ்வூரில் வசித்த போதெல்லாம், திரும்பவும் வேறு ஊருக்குப் போய் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்போதெல்லாம் ராஜவல்லிபுரம் வாழ்க்கை ஒரு இடைவேளையாக - இடைக்கால முகாம் ஆகத்தான் அமைந்தது. நிலைபெற்ற நினைவுகள் 3; 163