பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணீர் வற்றிவிட்ட பிறகு தான், ஊரார் குளிப்பதற்காக ஆற்றை நாடுவார்கள். அதுவும் ஏழு எட்டு மணிக்குப் பிறகுதான். இதர நேர மெல்லாம் ஆற்றங்கரையும் ஆறும் ஆளரவமற்று அமைதியான சூழலாகத் தான் இருக்கும். ஆகவே எங்கள் யோகாசனப் பயிற்சிக்கு ஏற்ற அருமையான இடமாக அமைந்திருந்தது ஆற்றங்கரை, காலையிலும் மாலையிலும் ஆற்றுக்குப் போய் வந்த நேரம் தவிர, இதர பொழுதுகளெல்லாம் செய்வதற்கு வேலை எதுவுமின்றி சும்மாவே கழியும் இப்படி வேலை எதுவும் செய்யாமல், படிப்பு போன்ற பயனுள்ள காரியம் எதிலும் ஈடுபடாமல், சும்மா வெட்டிப் பொழுது போக்கிய இளைஞர்கள் கிராமத்தில் அதிகம் பேர் இருந்தார்கள். அவர்களுக்குக் குடும்பச் சொத்து இருந்தது. வசிப்பதற்கு வசதியான வீடு இருந்தது. கலியாணமாகாததால் குடும்பப் பொ.றுப்பு கவலை என்று எதுவும் கிடையாது. இத்தகையவர்கள் எந்நேரமும் கூடிப் பேசிப் பொழுது போக்குவதற்கு நடுத்தெருவில் வசதியான ஒரு விடும் கிடைத்திருந்தது. சக்திசங்கர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் மனைவியை இழந்தவர். இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும் மிகச் சிறுவயதின ராய், அவருக்கு இருந்தார்கள். அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. வேலைக்காரி ஒருத்தி வந்து சமையல் வேலைகளை செய்து முடித்து விட்டுப் போய்விடுவாள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்விடுவர். அவர்கள் பெரும்பாலான பொழுதுகளை கீழ்த்தெருவில் இருந்த அம்மாச்சி (அம்மாவின் தாய்) வீட்டிலேயே போக்கினர். ஆகவே, அவருடைய வீடு ஒய்ந்த மடமாக இருந்தது. வேலையற்றவர்கள் கூடிப் பெழுதுபோக்குவதற்கு ஏற்ற இடமாக அமைந்திருந்தது அது அந்த வீட்டில் கூடியவர்கள் பேசி வம்பளந்தும் படுத்துத் தூங்கியும், சீட்டாடி மகிழ்ந்தும் நாள்களை ஒட்டிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடுவதற்கு மட்டும் அவரவர் வீட்டுக்குச் சென்று வருவார்கள். பிறகு ஊர்க்கதை, நகர்க் கதை பேசி மகிழ்வது தான் அவர்கள் வேலை. இரவுகளிலும் வெகுநேரம் வரை பதினொன்று பன்னிரண்டு மணி வரை - அவர்களது வம்பர் மகாசபை ஜாம்ஜாமென்று நடைபெறும் அது வீட்டின் அறைக்குள் அடைபட்டுக் கிடப்பதில்லை. நான்கு தெருக்கள் கூடும் சந்தி நடு நாயகமாகத் திகழ்ந்தது. அங்கு ஒரு வீட்டின் சுவரை ஒட்டி இரண்டு மொட்டை வண்டிகள் கிடந்தன. எப்பவும் நிலைபெற்ற நினைவுகள் 8 171