பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுவதாக ரசிகர்கள் உணர்ந்து கைதட்டி விசிலடித்து, ஆரவாரமாக அந்தப் பாடலை ரசித்தார்கள். ஊர்தோறும் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தப் பாடல் உடை வெளுக்கும் தொழில் புரிவோரின் பலத்த எதிர்ப்பைக் கிளப்பி விட்டது. வண்ணார் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவும், அசிங்கமான பொருள் கொள்ளும்படியும் அந்தப் பாட்டு பாடப் படுகிறது என்று அவர்கள் கிளர்ச்சி செய்தார்கள். கண்டனங்கள் தெரிவித்தார் கள். ஆனாலும், படம் வெற்றிகரமாக ஓடி, அந்தப் பாடல் பி.எஸ். சிவபாக்கியத்துக்கு மேலும் அதிகமான பெயரை தந்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்நாள்களிலேயே சினிமா மக்களிடையே பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவாறு தான் வளர்ந்து வந்தது. விரும்பத்தகாத பாதிப்புகளும் கூடத் தான். சிந்தாமணி என்ற படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. ஒவ்வொரு ஊரிலும் மாதக் கணக்கில் ஒடியது. எம்கே தியாகராஜ பாகவதர் பாடி நடித்தது. அவருடன் இணைந்து அசுவத்தம்மா என்ற நடிகை நடித்திருந்தார். வேறு மொழி நடிகை. கன்னடத்துக்காரியாக இருக்கலாம். அவரிடம் ஒரு தனிக்கவர்ச்சி இருந்தது. அவர் கண்கள் பெரும்பலரைக் கிறங்கடித்தன. அக் கண்களின் சுழற்சியிலே சிக்கிப் பித்துற்ற இளைஞர்கள் மிகப் பலராவர். இலங்கையிலிருந்து ஒரு இளைஞர் அசுவத்தம்மா பித்துப் பிடித்து, அசுவத்தம்மாவை பார்க்க வேண்டும். அவர் கண்களின் காந்தப் பார்வையை நேரடியாகப் பெற வேண்டும் என்று தமிழ் நாடு வந்து சேர்ந்து ஏங்கித் திரிந்தார் என்று அக்காலத்தில் சொல்லப்பட்டது. அந்த இளைஞரைப் போலவே, அசுவத்தம்மாவை நேரில் பார்க்க வேண்டும் என்று எத்தனையோ பேர் அலைந்து திரிந்தார்கள். நான் பரமக்குடியை விட்டு வெளியேற வேண்டிய காலமும் வந்து சேர்ந்தது. திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள பூரீவைகுண்டம் ஊரின் விவசாய ஆபீசுக்கு நான் மாற்றப்பட்டேன். தானாக வந்து சேர்ந்த ஊர் மாற்றம் அது. பூரீவைகுண்டம் ஆபீசில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்து கொண் டிருந்த சாம்பசிவம் என்பவர் பரமக்குடிக்கு மாற்றப்பட்டார். ஒரு 202 கிே வல்லிக்கண்ணன்