பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருக்கு அறிமுகமான சின்னப்பையன் இப்போது அவருக்கு மேலான பதவியில், ஒரே ஆபீசில் வேலை பார்க்க வந்துவிட்டது அவருக்கு சங்கடமான உணர்வை ஏற்படுத்தியது. ஆயினும் சமாளித்துக் கொண்டார். சகஜமாகப் பேசிப் பழகினார். இப்போது நீ போட்டுப் பேசமுடியாது. நீங்கள் என்று மரியாதைப் பன்மை உபயோகிக்க வேண்டும் அது அவருக்கு முதலில் ஒருவித தயக்கத்தைத் தந்தது. பிறகு சரிப்படுத்திக் கொண்டார். நான் மெசஞ்சர், மேஸ்திரி, பெரியவர் சிறியவர் யாரையுமே நீங்கவாங்க என்ற தன்மையிலேயே விளித்துப் பேசியதால் எனக்கு சங்கட உணர்வு எதுவும் ஏற்படவில்லை. இவ்விதம் நீங்கள் போட்டுப் பேசியதில் ஒரு தர்மசங்கடமான நிகழ்வு ஒருவருக்கு ஒருசமயம் ஏற்பட்டுவிட்டது. அது சுவாரசியமான விஷயம் முன்னால் ஒரு இடத்தில், என் அப்பாவுக்கு மருத்துவ சிகிச்சை செய்த செல்லம் பண்டிதர் பற்றி எழுதும் போது, அவரது உறவினரான சொர்ணம் பண்டிதர் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். இருவரும் நாவித இனத்தவர். இவர்களை மற்ற எல்லோரும் - சின்னப் பையன்கள் கூடநீ வா-போ என்ற தன்மையில் தான் பேசி அழைப்பார்கள் என்றும் குறித்திருக்கிறேன். நான் பூரீவைகுண்டம் விவசாய ஆபீசில் வேலை பார்க்கிறேன் என்று சொர்ணம் பண்டிதர் கேள்விப்பட்டிருந்தார். ஏதோ வேலையாக பூரீவைகுண்டம் வந்த அவர், நினைவு கூர்ந்து என்னைப் பார்ப்பதற்காக ஆபீசுக்கு வந்தார். ஐயா கும்பிடுறேன் என்று கைகூப்பி, தோளில் கிடந்த துண்டை இறக்கி கையில் வைத்துக் கொண்டார். தான் வாங்க, இப்படி பெஞ்சில் உட்காருங்க என்று உபசரித்தேன். அவர் துண்டை தரையில் போட்டு அதன் மீது உட்கார்ந்தபடி, ஐயாவுக்கு என்னை தெரியுதா? நான் சொர்ணமில்லா என்றார். உங்களை எனக்குத் தெரியாதா என்ன! நான் ராஜ வல்லிபுரத்தில் இருந்த போது, நீங்க அநேக தடவை வீட்டுக்கு வந்திருக்கீங்களே என்றேன். என் பேச்சு அவருக்கு கஷ்டத்தைத் தந்தது. அவர் முகபாவனை களிலும் நெளிந்து சிரமப்பட்டதிலும் அது எனக்குப் புரிந்தது. 214 ஐ வல்லிக்கண்ணன்