பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதக் கணக்கில் போலீசார் முயன்றனர். வலை வீசினர். அகப் படாமல் திரிந்த இரண்டு பேரும் ஒருநாள் பிடிபட்டார்கள். காசித் தேவனையும் அவன் கூட்டாளியையும் கைவிலங்கு மாட்டி போலீசார் வீதிகள் வழியே இட்டுச் சென்றனர். அவர்களைப் பார்ப்பதற்கு பெரும் விவசாய ஆபீஸ் இருந்த வீதி வழியே அவர்களைக் காவலர்கள் நடத்திச் சென்றபோது நான் காசித்தேவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. ஏமாற்றம் தரும் உருவத்தினன் ஆகவே இருந்தான். எங்கும் பரவியிருந்த வீரப்பிரதாபச் செய்திகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத சாதாரண நபராகவே காசித்தேவன் காட்சி தந்தான். உயரமான, மெலிந்த உடல். எடுப்பான மீசையோ மிடுக்கான உடலமைப்போ பெற்றிருக்கவில்லை. பெயர் பெற்ற நாட்டுத் துப்பாக்கி அப்போதும் அவன் கையில் இருந்தது. அவனுடைய கூட்டாளியும் விசேஷத் தோற்றம் எதுவும் பெற்றிருக்கவில்லை. பிடிபட்ட இருவர்கள் பேரிலும் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. ஜனங்கள் காசித்தேவனை சீக்கிரமே மறந்துவிட்டார்கள். காலம் அதன் இயல்புப்படி போய்க்கொண்டிருந்தது. தங்கும் இடம் அவ்வப்போது ஒரு பிரச்சினையாகத் தலைதூக்கி தொந்தரவு கொடுத்தது எனக்கு நான் பூரீவைகுண்டம் வந்த நாளிலிருந்து ஆபீசில் தான் தங்கி வந்தேன். சவுகரியமாகத் தான் இருந்தது. சில மாதங்கள் ஆனதும் மேஸ்திரி முத்துசாமி பிள்ளை என்னிடம் சொன்னார். ஆபீசிலேயே தங்குவது சரியில்லை; வேறே ஒரு ரூம் பார்த்துத் தங்குவதுதான் நல்லது. ஆபீசர் ஐயா இப்ப ஒண்னும் சொல்லலே திடீர்னு அவரு அதை குற்றமாகச் சொல்வாரு என்றார். அவரே ஒரு அறை தேடித் தந்தார். அதே வீதியில், பெருமாள் கோயிலுக்கு வடக்கே சிறிது தள்ளி, மடம் மாதிரி ஒரு கட்டிடம் இருந்தது. அதில் ஒரு அறை தனிநபர் தங்குவதற்கு வசதியாக அமைந்திருந்தது. அதை வாடகைக்கு விட்டு வந்தார்கள். அந்த அறை இந்தச் சமயத்தில் காலியாக இருந்தது. அதை எனக்காக மேஸ்திரி பேசி முடித்தார். மாதம் மூன்று ரூபாய் வாடகை, 226 3 வல்லிக்கண்ணன்