பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பைக் கொண்டாட வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பதும், அப்படியே செய்யப்படுவதும் தவிர்க்கமுடியாததாயிற்று. இருப்பினும் கோபாலசாமியை குலதெய்வமாக வரித்துக் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் எப்பவாவது ஒரு முறையேனும் சாமியை அவரவர் வீட்டுக்குக் கொண்டுவந்துவைத்து முறைப்படி பூஜை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. எங்கள் வீட்டிலும் ஒரு அறையில் சாமி சேர் மாடமும் அதை ஒட்டிய பெரிய மாடக்குழியும் எடுப்பாக அமைக்கப்பட்டிருந்தன. அந்த வீடு வசதியாக, அநேக அறைகளுடன் கட்டப்பட்டிருந்தது. திறந்த முற்றம் அதை ஒட்டி தார்சா (திண்ணை), கதவைத் திறந்ததும் பெரிய பட்டாசல் (பட்டாசாலை) அதன் மூன்று புறமும் தனி அறைகள். அடுப்பங்கரையாகப் பயன்படுத்தப்பட்ட அறையை ஒட்டி அரவீடு (அரங்கு வீடு) என்கிற சிறு அறை சமையலுக்குத் தேவைப்படும் சாமான்களை பாதுகாப்பாக வைத்திருக்கிற இடம் அந்த சமையல் அறைக்கு வடபக்கம் காலி மனை கிடந்தது. அந்த இடத்தில், புதிதாகத் தனி சமையலறையும் விஸ்தாரமான தொட்டிக்கட்டும் கட்டுவது என்று திட்டமிடப்பட்டது. தோட்டத்து மூலையில் கிணறு இருந்தது. அப்பா பணியிலிருந்து விடுமுறை பெற்று ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கி, வீட்டுப் பகுதியை விஸ்தரிக்கும் பணியில் ஈடுபட்டார். அதற்காக ஊரில் தங்கியிருந்த காலம் இனிமையானதாக இருந்தது. வீட்டில் வில்வண்டி இருந்தது. அதற்காக மாடுகள் வளர்க்கப் பட்டன. வீட்டு உபயோகத்துக்குப் பால்மோர் தேவை என்று பசு மாடும் வளர்க்கப்பட்டது. கிராமங்களில் வில்வண்டி வைத்திருப்பது அவசியத் துக்குப் பயன்படக்கூடியது என்பதோடு அந்தஸ்தின் சின்னமாகவும் கருதப்பட்ட காலம் அது. அப்பா வெளியூர்களில் உத்தியோகம் பார்க்கையில், சுற்றுப்புற ஊர்கள் பலவற்றுக்கும் பணிநிமித்தம் போய்வர வேண்டிய தேவை இருந்தது போக்குவரத்து வசதிகள் ஒரளவு கூடத் தலை காட்டியிராத காலம் அதனால் சொந்தமாக வில்வண்டியும் மாடுகளும், அவற்றைப் பேண வேலைக்காரனும் கட்டாயம் இருந்தாக வேண்டிய நிலைமை. அந்த வண்டியும் மாடுகளும் வேலைக்காரனும் கிராமத்துக்கும் 46 3 வல்லிக்கண்ணன்