பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திக்க நேர்ந்த குற்றவாளிகளின் சாகசங்கள், அவர்களை சாமர்த்திய மாக மடக்கிப் பிடித்த சாதனைகள் பற்றி எல்லாம் சுவாரசியமாகச் சொல்வார். ஒரு இரவில், வீட்டுத் திண்ணையை ஒட்டிய தரையில் ஈசிச்சேரில் அப்பா சாய்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார். அரிக்கன்லாந்தர் மங்கிய வெளிச்சம் தந்து கொண்டிருந்தது. அண்ணன், நான், தம்பி மூவரும் திண்ணையின் பட்டியக் கல்லில் உட்கார்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்தோம் வண்டிக்காரனும், வேறொரு சேவகனும் வாசலில் நின்றார்கள். அப்போது கன்னங்கரேலென்று, தடியாக ஒரு பிராணி தோட்டத்துப்பக்கமிருந்து ஓடிவந்தது. வீட்டை ஒட்டியதோட்டத்தில் அவரைக்கொடி, தூதுவளை, கீரை முதலியன பயிரிடப்பட்டிருந்தன. ஒரு ஓரத்தில் குப்பைக் கிடங்கு அங்கிருந்துதான் அந்த ஜந்து வந்திருக்க வேண்டும் ஈசிச்சேரை நோக்கி அது முன்னேறி வந்தது. வண்டிக்காரன் அதை கவனித்து விட்டான். ஏ நட்டு வாக்காலி யில்லா' என்று கத்தினான். சேவகன் தன் கையிலிருந்த தடியால் அதன்மீது ஒரு போடுபோட்டான். அது நசுங்கி அசிங்கத் திரவம் வடித்தது. எத்தாத் தண்டி நட்டு வாக்காலி இது கடித்தா ஆள் பிழைக்க முடியாது என்று சொன்னான். நல்லகாலம் வண்டிக்காரன் அதை பார்த்தான் என்ற மகிழ்ச்சி எல்லோருக்கும். அது அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடம் தண்ணிர் கொண்டு சுத்தம் செய்யப் பெற்றது. மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக, குப்பைக்கிடங்கில் சேர்ந்திருந்த குப்பை முழுவதும் மொட்டை வண்டிகளில் அப்புறப் படுத்தப் பட்டன. தோட்டமும் செத்தை குப்பை இல்லாதவாறு பெருக்கி சுத்தமாக்கப்பட்டது. இந்த விதமாகப் புதியபுதிய விஷயங்களை அறிந்துகொள்ளக் காலம் உதவிக் கொண்டிருந்தது. - ஒருநாள் வேடிக்கை காட்ட ஒரு ஆள் வந்து சேர்ந்தான். பெரிய வீடுகள் தோறும் சென்று ஜாலவித்தைகள் செய்துகாட்டி, காசு வாங்கிப் பிழைக்கும் வித்தைக்காரன். அவன் பின்னாலேயே தெருப்பிள்ளைகள் கூட்டமாக வந்தன. 58 38 வல்லிக்கண்ணன்