பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுக்குப் போக வேண்டுமானால் ஒன்றரைமைல் தூரத்துக்கும் அதிகம் போகவேண்டும். மங்கலக் குறிச்சி என்ற சிற்றுரைத் தாண்டி, ஒரு வழியில் திரும்பி, இறக்கத்தில் சென்றால் தாமிரவர்ணி ஆறு தென்படும் மங்கலக்குறிச்சி போகிற ரஸ்தா நெடுகிலும் தென்னை மரங்கள் தான். பச்சைநிற இளநீர் காய்கள், செவ்விளநீர் மற்றும் வெள்ளை இளநீர் என்று பல நிறங்களில் காய்கள் குலைகுலையாகக் காய்த்துத் தொங்குவதும், அநேக மரங்களில் பாளை பிளந்து பூக்கள் சிரித்துக் காட்சி தருவதும் மனரம்மியமாக விளங்கும். மங்கலக்குறிச்சியிலிருந்து வேறு திக்கில் திரும்பிச் செல்கிற பாதை ஏரல் ஊருக்குக் கொண்டு சேர்க்கும் பணி நிமித்தமாக அப்பா அடிக்கடி ஏரல் போக வேண்டிய அவசியம் ஏற்படும். வில்வண்டியில் போவார். சிலசமயம் எங்களையும் கூட்டிச் செல்வார். ஏரலில் சிலுவைப்பிள்ளை என்பவர் சாராயக் கடைக் கான்ட்ராக்ட ராகத் தொழில் புரிந்து வந்தார். அடிக்கடி அவர் எங்கள் வீட்டுக்கு வருவது உண்டு. எங்களிடம் அன்பும் பிரியமும் காட்டுவது அவர் இயல்பாக இருந்தது. வீட்டுக்கு அவர் வருகிறபோது, புதுவிதமான மிட்டாய்கள் வாங்கி வந்து எங்களுக்கு அளிப்பார். ஏரலுக்கு நாங்கள் போனால் பிரியமாக உபசரிப்பார். பருகுவதற்கு கலர் பானம் தின்பதற்கு தினசு தினுசான மிட்டாய்கள், பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். விளையாட்டு பொம்மைகளும் வாங்கித் தருவார். அவரும் வேறு சிலரும், ஆங்கிலப் புதுவருடப் பிறப்பின் போது வசீகரமான காலண்டர்கள் கொண்டு தருவார்கள். பெருங்குளத்தில் வசித்த போது தான் காலக்கணிப்பு உணர்வு எனக்கு ஏற்பட்டது. கோவில்பட்டியில் வாழ்ந்த போதும் காலண்டர்கள் வீட்டில் இருந்திருக்கும். ஆனாலும் வருடம் மாதம் தேதி என்ற காலப் பிரக்ஞை அப்போது ஏற்பட்டதில்லை. எனது ஐந்தாவது வயதின் இறுதியில், ஆறாவது வயது துவக்கத்தில் தான் காலக் கணக்கை நான் கற்றுக்கொள்ளலானேன். - பெருங்குளத்தில் வசித்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த 1926, 1927ஆம் வருடக் காலண்டர்கள், அவற்றில் வசீகரமாக அச்சிடப் பட்டிருந்த வர்ணச் சித்திரங்கள் என்னை ஈர்த்து, மனசில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஜெர்மனியில் அச்சாகி வந்த படங்கள். கொழும்புவிலிருந்து சிலுவைப்பிள்ளை பெற்ற 70 வல்லிக்கண்ணன்