பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகப்படுத்தி மகிழ்ச்சி தந்தது. அது நல்ல பொழுது போக்கு ஆக இருந்தது. நவராத்திரி சமயம் பொம்மை வியாபாரி அழகு அழகான பொம்மைகள் கொண்டு வந்து, கோயில் அருகே கடைபரப்புவான். நல்ல வியாபாரம் நடக்கும், நாங்கள் முதலில் இரண்டு சிறு பொம்மைகள் வாங்கினோம். அவை போதா என்று சொல்லி, அப்பா பெரிய பொம்மைகள், அழகான பூனை, ஆடு, மான், கிளி, மயில், கிருஷ்ணன் என்று அதிகமாக வாங்கித் தந்தார். எங்கள் வீட்டில் கொலு வைத்ததில்லை. ஆயினும் பொம்மைகள் அதிகம் சேர்ந்தன. அவை எல்லாம் நீண்டகாலம் வரை பாதுகாக்கப்பட்டன. பின்னர், பல வருடங்களுக்குப் பிறகு, ராஜவல்லிபுரத்தில் வசித்த போது, பொம்மைகளை உறவுக்காரர்களின் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியுடன் அந்தச் சின்ன வயசிலேயே எனக்கு கதைகள் மீது அதிகமான ஆர்வம் ஏற்படுத்தும் சூழல் அமைந்திருந்தது. - அம்மா படிப்பறிவு இல்லாதவள். ஆனாலும் தலைமுறை தலைமுறையாக மக்கள் மத்தியில் சொல்லப்பட்டு வருகிற புராதனமான கதைகளை எல்லாம் அவள் அறிந்துவைத்திருந்தாள். மக்கள் வாழ்வில் உயிருடன் உலாவிய பேய்பிசாசுகள் பற்றிய கதைகள், மூத்தாள் மகளை கொடு படுத்தும் மாற்றாந்தாயின் செயல்களை, சுவாரசியமாக விவரிக்கும் கதைகள், அப்பாவி மருமகள்களின் செயல்கள் பற்றிய கதைகள், மீனாராசா மகளுக்கு பொண்ணுண்டோ என்று தேடி அலைகிறவர்கள், நாக கன்னிகை பற்றிய கதைகள் - இப்படி நிறையக் கதைகளை அம்மா சொல்வது உண்டு. பிற்காலத்தில் நாட்டார் வழக்கியல், தொன்மக் கதைகள் என்றெல்லாம் பிரித்து ஆய்வு செய்யப் படுவதற்கு உதவிய மக்களின் செவிவழிக்கதைகள் கிராம மக்களிடையே ஜீவித்து வந்தன. கால ஓட்டத்தில் அவை மறக்கப்பட்டு விட்டன. படிப்பறிவு பெற்ற பெண்கள் உயிர்த் துடிப்புள்ள கதைகள் சொல்லும் கலையை கற்றுக் கொள்ளவேயில்லை. அப்பா வேறு ரகமான கதைகள் சொன்னார். அனுபவம் சார்ந்த கதைகள் அவை. அவருடைய உத்தியோக உலகத்தில் எதிர்ப்பட்ட குற்றவாளிகள், அவர்களை சாகசமாகப் பிடித்த விதம் பற்றி எல்லாம் சொல்லுவார். அத்துடன் கால் திருடன் - அரைத்திருடன் முக்கால் 88 : வல்லிக்கண்ணன்