பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் குழந்தையும் அப்புறம் நெடுநாள் உயிரோடிருக்கவில்லை. சாவு அதையும் விழுங்கிவிட்டது. இந்த விதமாக எனது உணர்வுகளின் விழிப்புக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பெருங்குளம் பெரிதும் உதவியுள்ளது. இந்தப் பெருங்குளம் தான் பத்மாவதி சரித்திரம் சத்யானந்தன் கிளாரிந்தா முதலிய பல நாவல்களையும் குசிகர் குட்டிக் கதைகளையும் எழுதிய அ. மாதவய்யாவின் ஊர். இத்தகவலை நான் பிற்காலத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஊர் மாதவய்யா என்பவரும் என்னைப் போல சால்ட் அன்ட் எக்சைஸ் சப்இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் தான். அவரை எனக்குத் தெரியும். அவர் அந்த வேலையை விட்டுவிட்டார். கதைப் புத்தகங்கள் எழுதிப் பெயர்பெற்றிருக்கிறார். ஒரு பத்திரிகை நடத்தினார். அவர் இப்போது இந்த ஊரில் இல்லை என்று அப்பா சொன்னது உண்டு. 'குசிகர் குட்டிக் கதைகள் புத்தகத்தின் பழைய பிரதி ஒன்று ராஜவல்லிபுரம் வீட்டில் ரொம்ப காலம் இருந்தது. மாதவய்யா நடத்திய பஞ்சாமிர்தம் பத்திரிகையின் ஒன்றிரண்டு இதழ்களும் இருந்தன. பிறகு அவை அழிந்து போயின. நான் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நான்காம் வகுப்பு அடைந்தேன். அனைத்துப் புத்தகங்களும் வாங்கப்பட்டு விட்டன. வகுப்புகள் நடக்கத் தொடங்கியிருந்தன. அவ்வேளையில், அப்பாவுக்கு இடமாறுதல் உத்திரவு வந்து சேர்ந்தது. இம்முறை வெகு தொலைவில் உள்ள ஊருக்கு அப்பா மாற்றப் பட்டிருந்தார். ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள தொண்டி என்ற ஊருக்குப் போய் அவர் பணிபுரிய வேண்டும். அந்த ஊர் வெகு தொலைவில் இருந்தது. திருநெல்வேலி ஜில்லாவில் கிடைக்கிற வசதிகள் அங்கு இரா. அதனால் அப்பா மட்டும் அங்கே போவது என்றும், நாங்கள் திருநெல்வேலியில் தங்கி படிப்பைத் தொடரவேண்டும் என்றும் அப்பா முடிவு செய்தார். உரிய ஏற்பாடுகள் செய்கிற வரை நாங்கள் ராஜவல்லிபுரத்தில் தங்கியிருக்கலாம் என்று அம்மாவையும் எங்களையும் ஊரில் கொண்டு வந்து சேர்த்தார். 1928ன் நடுவில் நிலைபெற்ற நினைவுகள் 38 93