பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 99 அது தான் நல்லது. முறையாகப் பழந்தமிழ் இலக்கியம் படித்தவர்களால் புதுமையாக எதுவும் செய்யமுடியாது’ என்று வ.ரா.குறிப்பிட்டார். உடனே திருலோகம் அவருடன் சண்டைபிடிக்கலானார் 'வரா, நீங்கள் சொல்வது நல்ல யோசனையே இல்லை. எழுத்துத் துறையில் முன்னேற வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிற ஒர் இளைஞனிடம் பழந்தமிழ் இலக்கியங்களை படிக்காதே என்று சொல்வது எப்படி நல்ல ஆலோசனையாக இருக்க முடியும்? எல்லா இலக்கியங்களையும் படித்து, புதுமைகள் செய்ய முயல் என்று சொல்வதுதான் சரியான வழிகாட்டுதலாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். வரா. அது குறித்து வாதாடவில்லை. 'ஆபீசில்தான் உங்களுக்கு வேலை இல்லையே! என்னோடு வாங்க சென்னையையும் சென்னை எழுத்தாளர்களையும் பார்த்த மாதிரியும் இருக்கும்’ என்று திருலோகம் என்னிடம் சொன்னார். ‘நான் இவரை அழைத்துக்கொண்டு போகிறேன். சென்னை மாநகரத்தையும் இவர் பார்க்கவேண்டும் அல்லவா!' என்று ராமநாதனிடமும் கூறினார். அவர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. ஆகவே, தினந்தோறும் டிராம் வண்டியிலும் பஸ்ஸிலும் நடந்தும் சென்னையின் பல பகுதிகளிலும் சுற்றினோம். மாநகரத்தையும், மாநகரில் வசித்த முக்கிய எழுத்தாளர்களையும் அறிந்து கொள்வதற்கு உதவிய துணைவராய், வழிகாட்டியாய் நண்பர் திருலோக சீதாராம் விளங்கினார். செளகார்பேட்டை, லாயர் சின்னத்தம்பி முதலித்தெருவில் இருந்த பிரசண்ட விகடன் அலுவலகம் சென்று நாரண துரைக் கண்ணனைச் சந்தித்தோம். அவரே ஆனந்த போதினி மாத இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதே அலுவலகத்தில் இருந்து 'சித்திரகுப்த’ என்ற தெலுங்குப் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது. இப்பத்திரிகைகளின் வெளியீட்டாளர் நாகவேடு முனிசாமி முதலியார் ஆனந்த போதினி பஞ்சாங்க மும் வெளியிட்டு வந்தார். ஆண்டுதோறும் பத்திரிகைகள் மூலம் கிடைத்த வருமானத்தை விட பஞ்சாங்கம் மூலம் கிடைத்த லாபமே அதிகம். அதைக்கொண்டு ஒவ்வொரு வருடமும் ஒரு வீடு வாங்கினார் அவர் புதிய ஆண்டில்