பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ; 111 நினைப்பிலே நீங்க இது மாதிரி செய்திருக்கீங்க. அதுவும் சரிதான். "சினிமா உலகத்தை" இன்னும் நல்லபடியா நடத்தனும் இலக்கியப் பத்திரிகை நடத்தனும், புத்தகங்கள் பப்ளிஷ் பண்னணும்னு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனால் பொருளாதாரம் இடம் கொடுக்கலே.” இந்த ரீதியில் செட்டியார் பேசினார். நீங்க நல்லா வளர்ந்து முன்னுக்கு வரணும்கிறதுதான் என் விருப்பம். உங்களை மாதிரி நல்ல திறமையுள்ள அசிஸ்டன்ட் எனக்குக் கிடைக்க மாட்டாங்க. இருந்தாலும், உங்களுக்குத் தெரிந்த தகுதியான ஒருவரைச் சொல்லுங்க. சினிமா உலகத்துக்கு உதவியாக ஒரு ஆள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் என் அண்ணா கோமதி நாயகத்தைப் பரிந்துரைத்தேன். அவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

ஒ, உங்க அண்ணனை எனக்குத் தெரியும். உடனேயே அவருக்குக் கடிதம் எழுதி அவரை வரவழைத்துக் கொள்கிறேன் என்று செட்டியார் மகிழ்ச்சியோடு சொன்னார். அவ்வாறே விரைவிலேயே அவர் அண்ணா கோமதி நாயகத்தை கோயம்புத்துருக்கு வரவழைத்து சினிமா உலகம்’ பத்திரிகைக்கு உதவி ஆசிரியராக ஆக்கினார். உரிய காலத்தில் சக்திதாசன் சுப்பிரமணியன் இலங்கை யிலிருந்து திரும்பினார். மகிழ்ச்சியோடு காணப்பட்டார். இதழ் வேலைகள் உற்சாகமாக நடைபெற்றன. ராதாமணி அம்மையார் கூட, நவசக்தி'யை அப்படி ஆக்கணும் இப்படி ஆக்கனும் என்று பத்திரிகை வளர்ச்சி குறித்துப் பெரும் கனவுகளுடன் திட்டமிடுவார். ஜனவரி இதழ் வந்தது. பிப்ரவரி இதழுக்கான வேலைகள் தொடர்ந்தன. நான் தயக்கம் கொள்ளாது, காலம் கடத்தாது, துறையூருக்கு வந்துவிட வேண்டும் என்று திருலோக சீதாராம் தொடர்ந்து கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நாடக நடிகர் டி.கே.சண்முகத்திடமிருந்து ஒரு கடிதமும் நாடகக் கலை மாநாட்டுக்கான அழைப்பும் வந்தன. முதலாவது நாடகக் கலை மாநாட்டைப் பெரிய அளவில், ஈரோடில் சிறப்பாக நடத்த ஏற்பாடாகியிருந்தது. மாநாட்டுக்கு நான் கட்டாயம் வரவேண்டும் என்றும், அப்போது முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும் சண்முகம்