பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 125 அந்த சமயத்தில் தான் பாரதிதாசன் துறையூருக்கு வந்தார். திருச்சிக்கு வந்த கவிஞரை துறையூர் அன்பர்கள் தங்கள் ஊருக்கும் அழைத்து வந்தார்கள். அவர், அ.வெ.ர.கி. ரெட்டியாரின் அழைப்பை ஏற்று கிராம ஊழியன் அலுவலகத்துக்கும் வந்தார். உரிய மரியாதைகளோடு கவிஞருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய பாடல்களை அவரே பாடிக்காட்ட வேண்டும் எனும் வேண்டுகோளை ஏற்று பாரதிதாசன் தமது கவிதைகள் சிலவற்றைப் பாடிக் காட்டினார். பாரதியார் பாடல்களோடு பாரதிதாசன் பாடல்களையும் பாடிப்பரப்பி வந்த திருலோக சீதாராம் இந்தச் சமயத்தில் துறையூரில் இல்லை. ஆண்டு மலருக்கு விளம்பரம் சேகரிப்பதற்காகக் கோயம்புத்துரர் போயிருந்தார். கிராம ஊழியனில் உவமை நயம் என்ற தலைப்பில் ஒவ்வொரு கவிஞரின் பாடல்களில் காணப்படுகிற உவமைகள் பற்றிய கட்டுரைகள் திருலோக சீதாராம் எழுதியிருந்தார். அடுத்து பாரதிதாசன் உவமைகள் பற்றி நான் தொடர்ந்து சில கட்டுரைகள் எழுதினேன். எழுத்துக்கள் மூலம் பெயர் கவனிப்பு அதிகம் பெற்றிருந்த தால், வல்லிக்கண்ணன் என்றால் வயது முதிர்ந்த பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்றே பலரும் எண்ணுவது இயல்பாக இருந்தது. ஆளை நேரில் பார்த்ததும், இவர் தான் வல்லிக்கண்ணன் என அறிமுகம் செய்யப்பெற்றதும் அநேகர் ஆச்சர்யப்பட்டார்கள். நம்புவதற்குத் தயங்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. கவிஞர் பாரதிதாசனும் அவ்விதமே உணர்ந்தார், "வல்லிக்கண்ணனா!" என்று ஆச்சரியப்பட்டார். பையன் மாதிரி அல்லவா இருக்கிறே!’ என்றார். 'உன் போட்டோவை பத்திரிகையில் வெளியிடாதே. எழுத்தைப் படித்து விட்டு எப்படி எல்லாமோ எண்ணியிருக்கிறவங்க ஏமாற்றம் அடைவார்கள்' என்று சொன்னார். × . . ..... ... ‘இவர் படம் வெளிவந்து விட்டது. ஊழியனிலேயே அச்சிட்டிருக்கிறோம்' என்று ரெட்டியார் கூறி, என் படம் வெளிவந்திருந்த ஊழியன் இதழைக் கவிஞரிடம் காட்டினார். அவர் அதைப் பார்த்து விட்டு, போகட்டும். இனிமேல் படம் வெளியிட வேண்டாம் என்றார்.